அவளே பேச்சை தொடங்கட்டும் என பொறுமைகாத்தான் ரய்யான். ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை.

இறுதியில் ரய்யான் குரலை செறுமி அவள் கவனத்தை திருப்ப முயல அப்போதும் கை விரல்களை பின்னிக் கொண்டு வேறு உலகில் இருந்தாள் ஷிரீன்.

"என்ன மெடம் வர சொல்லிட்டு  ஸைலன்ட்டாவே இருக்கீங்க..?"

"ஆஹ்ஹ்!!! இல்ல..அது.. ஐ வொன்ன.. ஸே ஸம் திங்.." தட்டுத்தடுமாறி வந்தன வார்த்தைகள்.

"அது தெரியுது.. ஸைலன்ட்டாவே இருந்தா யாரு வந்து சொல்லுவாங்க?" என கேட்டுவிட்டு
"கம்மோன் ஷிரீன்!"

"ரய்யான்! " என விழித்துவிட்டு சில நொடிகள் தலையை குனிந்து தன்னை ஆசுவாசப் படுத்தித்தினாள்.

"இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியாது.. பட் எனக்கு இப்போ அடிக்கடி உங்களை பார்க்கணும் பேசனும்னு தோனுது! எப்பவும் உங்க கூடவே இருக்கனும்னு தோனுது! வேர்க், ஸ்ட்டடீஸ்ல எல்லாத்துலயும் கன்ஸன்ட்ரேஷம் மிஸ் ஆகுது! இதுக்கு முதல் இப்டி ஆனதில்ல! ஐ மீன் உங்கள பார்க்கும் வரை.. என்ட் ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ"

என்று கடகடவென அவளது பாணியிலே விரல்களை பார்த்தபடி கூறிமுடித்து மெதுவாக தலையை நிமிர்த்தினாள்.

சந்தோஷம் தாளாமல் அத்தனை காதலையும் தன் விழிகளில் சேர்த்துவைத்து அவளையே பார்த்திருந்தான் ரய்யான்.

"ரய்யான்! ஐலவ் யூ!! ஐ லவ்யூ ஸோ..மச் " அவன் பார்வைக்குள் மூழ்கினாள் ஷிரீன்.

பார்வைகள் இரண்டும் பொருந்திக்கொள்ள இருவரும் வேறோர் உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.

அவளது கடைசி வாக்கியம் மட்டும் அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அலைகளின் ஓசையோ, மக்களின் பேச்சுசத்தமோ, சாப்பாட்டுக் கடைகளை வட்டமிடும் காக்கைகளில் கூச்சலோ எதுவும் இருவரின் செவிகளையும் அடையவில்லை.பார்வைகள் ஒன்றை ஒன்று கவ்விநிற்க ஒருவர் மற்றவருக்குள் தொலைந்து கொண்டிருந்தார்கள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now