அவன்❤13

656 28 4
                                    

அந்த வீடு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு அமைதியாக இருந்தது. சற்று முன்னர் என்னமாதிரியான சூழல் இருந்ததோ அதற்கு எதிர்மாறாக எல்லாமே நடந்து முடிந்திருந்தது.

இராமநாதன் மட்டுமே இயல்பாக இருந்தார். ஏனெனில் அவர் எதை நினைத்து பயந்தாரோ அதையே அவர்களும் கேட்டிருந்தார்கள். சற்றும் அவர் எதிர்பார்க்காதது. தயானந்தன் பேசியது. உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தாலும். மகன் இதில் இருந்து எப்படி மீளப்போகிறான் என்ற கவலையும் இணைந்து கொண்டது.

அகிலா அதிற்சியில் இருந்து மீளவே இல்லை. அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். தயானந்தன் தன் அறையுள் கூண்டுப்புலியாக நடந்து கொண்டு இருந்தான். அவன் தொலைபேசி நொருங்கிப்போய் சிதறிக்கிடந்தது தரையில்.

அவர்கள் தான் அப்படி கேட்டார்கள் என்றால் அவன் காதலி அவனை அதற்கு சம்மதிக்க அல்லவா சொல்லி இருந்தாள். ஆக அவனை தன் வீட்டில் கொண்டு சேர்க்கவா அவள் எண்ணம் இருந்தது.

அப்போ அவள் தன்னை நம்பிக் காதலிக்கவில்லை. என்று சிந்தித்தபடியே இருந்தான்.

அவர்கள் தயானந்தனை தங்கள் வீட்டில் இருந்து சிவநேசனின் தொழில்களை பராமரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.

இராமநாதன் பதில் சொல்லமுதலில் ஓர் நொடி அகிலாவை பார்த்தார். அந்த முகத்தில் சொல்லமுடியாத தவிப்பு தெரிந்தது. எந்த தாயுள்ளம் தான் இதை ஏற்றுக்கொள்ளும்.

அவர் பதில் சொல்ல முதல் தயானந்தன் மன்னிக்கணும் அங்கிள். என்னால முடியாது. அது உங்களுடைய தொழில்கள் அதை யாழி நிர்வகிக்க முடியும். எனக்கு அது சரிவராது. அதோடு உங்கள் வீட்டிலும் கூட என்னால் அங்கேயே நிரந்தரமாக இருக்க முடியாது...

அவன் பதில் அவர்களுக்கும் பிடித்திருந்தது. ஆக பணத்திற்காக அவன் யாழியை காதலிக்கவில்லை. ஆனாலும் அவன் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றதே. முடிந்தவரை அவனை பல விதமாக கேட்டும் அவன் மறுக்கையில்.

என் உயிரானவன்.....Opowieści tętniące życiem. Odkryj je teraz