அவன்🤴1

3.8K 46 6
                                    

அலாரத்தின் ஓசையில் மணி ஐந்து என்றதும். அந்த கடுங்குளிரிலும் தயானந்தன் பரபரப்பாக எழுந்து கொண்டான். வெய்யில் காலம் என்றாலும் கூட அந்த மலைப்பிரதேசத்தில் குளிருக்கு குறைவிருக்காது.

கடந்த சில வருடங்களாக அவன் வாழ்வில் பல போராட்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆனால் இப்போது அவன் பார்ப்பது எல்லாம் வெற்றியையே....

கேலிகள் தான் வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற வெறியை அவனுக்கு ஏற்படுத்தியது. இன்றைய அவனது வெற்றிக்கும் அந்தஸ்த்துக்கும் காரணம் அவள் சிவயாழி.... அவன் உயிரிலேயே கலந்து விட்டவள்.

நான்கு வருடங்களாக பார்வையால் மட்டுமே அவளை தீண்டிக்கொண்டு இருக்கிறான். அவன் மனமும் அவள் அறிந்ததுதான். ஒரே பிரதேசத்தில் இருவரும் ஒரே காற்றையே சுவாசிக்கிறார்கள்.

ஆனாலும் பேசிக்கொள்வதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே பல தடைகள் இருந்தது. பணம் அந்தஷ்த்து. இன்று அவளளவில் அவன் இல்லை என்றாலும் அவனும் கோடீஸ்வரனே.

கடந்த நான்கு வருடங்களில் மூன்றுவருடங்கள் அவனது கடும் உழைப்பினால் படிப்படியாக முன்னேறி இந்த ஒரு வருடமாக அவன் வாழ்வில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள்.

ஒரு எஸ்ரேட்டுக்கு சொந்தக்காரன் கூடவே ரீதூள் தயாரிக்கும் கம்பனியும் பழரசங்கள் தயாரிக்கும் கம்பனியும் வைத்து நடாத்தி வருபவன். தற்போது தன் படிப்பை வீணாக்காமல் ஒரு சாப்ட்வெயார் கம்பனியும் ஆரம்பித்துள்ளான்.

இதற்கிடையில் அவன் கனவு இல்லம் என்பதை விட மாளிகை என்றே சொல்ல வேண்டும் அதுவும் அவன் புதிதாக வாங்கிய இடத்தில் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இன்று அவர்களுக்கு இடையில் தடையாய் இருப்பது எது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவன் தந்தை இராமநாதன் கொடைக்கானலில் பிரபலமான கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். கண்டிப்பானவர். அவரது திறமையால் மட்டுமே அவருக்கு அந்த கல்லூரியில் பணியாற்ற வாய்ப்புக்கிடைத்தது.

என் உயிரானவன்.....Where stories live. Discover now