அவன்👨‍💼3

788 24 2
                                    


அன்று ஒரு சனிக்கிழமை இரவு தன் அலுவலக நண்பர்களுடன் டின்னர் போயிருந்தான் அந்த உயர்தர ஹோட்டலுக்கு.

நண்பர்கள் பேசிச்சிரித்தபடி உணவருந்திக்கொண்டு இருந்தனர். அதில் நேரம் போனதே தெரியவில்லை. மணி ஒன்பதை தாண்டியவேளையில் தான் அனைவரும் கிளம்பி வீடுகளுக்கு சென்றனர்.

தயானந்தன் தன் வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தான். அவன் வந்த பாதையில் ஓரத்தில் ஒரு கார் சிகப்பு விளக்கு ஒளிர உதவிக்காக காத்து நின்றது.

என்னாவாக இருக்கும் வண்டி பஞ்சர் அல்லது எரிபொருள் தீர்ந்திருக்கும் என்று எண்ணமிட்டபடி நிச்சயம் ஆணாக தான் இருக்கும் அதுவும் இந்த நேரத்தில் என்றபடி தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரின் டிரைவர் இருக்கைபக்கம் கண்ணாடியில் தட்டினான்.

அடுத்த நொடியே கதவு திறந்து அந்த பெண் இறங்கினாள். பாதையின் மின் கம்ப விளக்கு வெளிச்சத்தில் யாரென கண்டுகொண்டவனுக்கு ஆராய்ச்சியுடன் கூடிய கோபம் வந்தது.

அவன் முகமாற்றத்தை அவளும் கண்டு கொண்டாள். அவளுக்கும் குற்றவுணற்சியாக இருந்தது. இவன் நம்மைபற்றி என்ன நினைப்பான் என்று.

என்ன இந்த நேரத்தில் என்ன பிரச்சனை என்றான் கடுமையாக.

அவளுக்கு ஏனோ வார்த்தைகள் தந்தி அடித்தது. அது... வந்து... வந்து... பிரண்ட் பிறந்தநாள் பார்ட்டி அதான் வரும்போது கார் திடீரெண்டு மக்கர் பண்ணிச்சு அதான் அண்ணாக்கு சொல்லிவிட்டேன் வந்திற்று இருக்கான். என்றாள் அவன் தன்னை தவறாக நினைக்க கூடாதே என்ற ஆதங்கத்தில் அவசரமாக கூறி முடித்தாள்.

அவர்கள் இருவரும் வார்த்தைகளில் காதல் சொல்லவில்லை ஒருவருக்கொருவர். இதற்கு முன் கதைத்ததும் இல்லை ஆனால் ஏதோ ஒருவிதமான உரிமையுணர்வு அவனுக்கும் அவன் மீதான பயம் அவளுக்கும்   இருந்தது.

தந்தையின் கார் ஓடுவதால் அதன் பழக்க தோசத்தில் தன் போன் வெளிச்சத்தில் காரினை சரி பார்த்துக்கொண்டு இருந்தான். சற்று தள்ளி நின்று அவனையே பார்த்துக்கொண்டு அவளும் நின்றாள். இரண்டு நிமிடம் கூட ஆகி இருக்காது அதற்குள் இவர்கள் அருகே கார் ஒன்று வந்து நின்றது.

என் உயிரானவன்.....Where stories live. Discover now