அவன் 🤵4

655 26 1
                                    

அவனது பிறந்தநாள் சந்திப்பிற்கு பிறகு அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள் பார்க் பீச் என்று கைகளை கோர்த்தபடி சுற்றித்திரிந்தார்கள்.

யாழி தன் காதல் விடயத்தை தன் வீட்டில் சிவாயினிக்கு மட்டும் கூறி இருந்தாள். அதுவும் ஒரு நாள் யாழி தன்னவனுடன் தொலைபேசியில் கதைத்து விட்டு திரும்புகையில் அவளையே பார்த்தபடி யாழியின் அறையில் சிவாயினி நின்றிருந்தாள். யார் என்ற கேள்வியை கண்களில் காட்டியபடி...

பதில் சொல்ல தாமதித்தது ஒரு சில விநாடிகளே. அடுத்த நொடியே மை ஹீரோ என்றாள். தமிழில் சில பதில்கள் சொல்ல தயங்கும் வார்த்தைகளை எல்லாம் இலகுவாக ஆங்கிலத்தில் சொல்ல முடியும்.

என்னது யாழீ.....
என்று வெளிப்படையாகவே அதிர்ந்து நின்றாள் சிவாயினி...

அவசரமாக வந்து கதவை சாத்தியவள். எதற்கடி இப்படி கத்துகிறாய். அப்படி என்ன அதிசயம் இதில் நான் ஒருவரை காதலிக்கிறேன். அவருடன் தான் கதைத்தேன்.

அம்மாடியோவ் யாழி உனக்கு ரொம்ப தைரியம் தான்டி... நம் வீட்டில் இதெல்லாம் சாத்தியமாடி...என்ற சிவாயினிற்கு

அசராமல் பதில் கொடுத்தாள். சாத்தியம் தான் எனக்கு அவரை பிடித்திருக்கிறது காதலிக்கிறேன். அவ்வளவும் தான். கல்யாணம் பண்ணும்போது மற்றயதை பற்றி சிந்திக்கலாம். ஆனால் நானாக இதை வீட்டில் சொல்லும் வரை நீ யாரிடமும் வாய் திறக்கப்படாது.

காட்பிராமிஸ்டி நான் யாரிடமும் சொல்லமாட்டேன். நீ இன்று என்னிடம் மாட்டியது போல யாரிடமும் மாட்டிவிடாதே. எச்சரிக்கையாக இரு. ஆமாம் யார் அந்த ஹீரோ? எங்கே படத்தை காட்டு பார்ப்போம். எத்தனை நாட்களாக இந்த காதல்??

தன் போனில் அவனுடன் இருந்த படங்களை காட்டுகையில். சிவாயினிக்கு இவனை எங்கோ கண்டது போல இருக்கே என்ற சிந்தனை வந்தது.

ஆள் செம ஹான்சம் தான் ஆனால் எங்கோ கண்டிருக்கிறேன்டி என்றாள்.

வேறு எங்கு பெருமாள் கோயிலில் கண்டிருப்பாய்.

ஆமால்ல... சரி அங்கு தான் நீயும் முதல்ல கண்டியா??

என் உயிரானவன்.....Where stories live. Discover now