அவன் 🤵8

521 24 2
                                    

முதல் நாள் தான் திருமணம் நடந்து இருந்ததனால் மறுநாள் ஆண்கள் யாரும் அலுவலகம் செல்லவில்லை. அனைவரும் வீட்டில் தான் ஓய்வாக இருந்தனர்.

ரேகா அடிக்கடி கணவனாரிடம் கண்களால் மகளிடம் பேசச்சொல்லி சைகை செய்தபடி இருந்தார். அன்று யாழியும் வெளியே செல்லவில்லை. தயானந்தன் மாலையில் தான் தன்னால் வரமுடியும் என்று சொல்லி இருந்தான்.

அதனால் அவளும் கூட வீட்டிலேயே இருந்தாள். மதிய உணவுக்கு பின்னர். சிவனேசன் மகளை தன் அலுவலக அறைக்கு வரச்சொல்லி அழைத்து சென்றார்.

யாழிக்கு தாய் காலையில் கேட்டதையே தந்தையும் கேட்க போவதாக நினைத்து தாயாருக்கு கொடுத்த பதிலே அவருக்கும் என்று முடிவெடுத்து சென்றாள்.

மகளை அமரச்சொல்லிவிட்டு கண்ணம்மா அம்மா காலையில் கேட்டாளாமே அதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்றார்.

அம்மாக்கு பதிலும் சொல்லிற்றேன்பா. இப்போ வேண்டாம்.

ஏன்மா இப்போது கதைத்து வைப்பது மட்டும் தானே.

எனக்கு பிடிக்கலப்பா என்றாள் கதையை மேலும் நீடிக்க விரும்பாமல்.

வேறு யாராவது உன் மனதில் இருக்கிறார்களா? அதனால் தான் இப்படி சொல்கிறாயா?

அவளுக்கு உள்ளுக்குள் திக் என்றது..

மகளது அதிர்ச்சியை கவனித்தபடி. லண்டனில் இருந்து வந்ததில் இருந்து என் மகளது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அதனால் கேட்டேன்..

ப்பா......

சொல்லு கண்ணம்மா உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். அதோடு என் மகள் என்றைக்கும் பிழையாக தேர்வு செய்யமாட்டாள்.

ஆமாப்பா நான் ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் நாங்கள் இப்போது திருமணம் செய்ய நினைக்கவில்லை...

யார் அந்தப்பையன். உன் கூடப் படிப்பவனா?

நோ ப்பா... அவர் இங்கு தான் இருக்கிறார். என்பது முதல் யார் என்ற வரைக்கும் தந்தைக்கு சொன்னாள். அவளைப்பொருத்தவரை சிவனேசன் பணத்தை வைத்து ஆட்களை மதிப்பவர் அல்ல...

என் உயிரானவன்.....Where stories live. Discover now