பட்டத்தின் மோட்சம்

41 3 2
                                    

நாம் கைவிடபடுகிறோம்!!!

நாம் கைவிடபடுகிறோம்!!!

என்ற சந்தோஷமான அக எழுச்சியுடன் நாங்கள் உயர பறந்தோம்.

மெல்ல கைவிடப்படுவதே எங்கள் உயர்வு.

பட்டமும் நூலுமாகிய நாங்கள் சபர்மதியின் கரையில் உயர எழும்பினோம்.

எங்களை மெல்ல கைவிடும் பொற்கரங்களுக்கு நன்றி.

அந்த கரங்களின் ஒரு ஆசையின் இரு வெளிபாடே நாங்கள்.

வானில் பிறர் காணப்பறந்து மூழ்கி மறைய - வேண்டும் என்ற ஆசையே பட்டங்கள் ஆகின்றன.

வானில் பிறர் காணாதபடி பறந்து சிலருக்கு மட்டும் தெரிந்து மூழ்கி மறைய விரும்பும் ஆசையே வண்ண நூட்கள் ஆகின்றன.

மேலும் உயர முடியாத ஒரு உச்சத்தை அடைந்தபின் தோன்றியது நாம் வானில் மூழ்கி மறைய முடியாதென்ற எண்ணம்.

மரத்திலோ, மின்கம்பியிலோ சிக்கி அங்கேயே தொங்கிக் கிடப்பதே பட்டங்களின் இறுதி.
அதுவே நமக்கும்.

மோட்சம் என்பது மோசடியா??? என்றுமே நாம் வானில் மூழ்கி மறையமுடியாதா???

அய்யோ!!!

நம்மை இயக்கும் கைகளுக்கு என்ன ஆயிற்று???

என்ன ஆயிற்று???

சரி.

இவ்வளவு உயரம், இவ்வளவு நேரம் பறக்க வைத்த கரங்களுக்கு நன்றி. காற்றுக்கு நன்றி.

நமக்கு மரமா??? மின்கம்பியா???

நடப்பது நடக்கட்டும்.

பறப்பது பறக்கட்டும்‌.

மெல்ல அலைக்கழிக்கபட்டு எங்கோ விழுந்தோம்...

என்ன இது??? மீண்டும் நாங்கள் வானத்தில் மிதக்கிறோம்???
இப்போது எங்களை இயக்கும் கரங்கள் எவை???

என்ன இது வானதின்னுள்ளே இத்தனை மீன்கள்???

இவை தான் விண்மீன்களோ???

அது இருப்பினும் பகலில் எப்படி???

'வானம் - வானத்தில் மட்டுமல்ல நதியிலும் உண்டு' என்றது ஒரு விண்மின்.

வானத்தில் மறைந்து மூழ்குவதே பட்டத்தின், அதன் நூலின் மோட்சம் எனில்,
மோட்சம் என்பது மோசடி அல்ல.

இதோ சபர்மதியின் மடியில் பிற பட்டங்கள் அடைய முடியாத மோட்சத்தை நாங்கள் இக்கணம் அடைகிறோம்.

இதோ சபர்மதியின் மடியில் பிற பட்டங்கள் அடைய முடியாத மோட்சத்தை நாங்கள் இக்கணம் அடைகிறோம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

#International_Kite_Festival_2020#sabarmati_RiverFront

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

#International_Kite_Festival_2020
#sabarmati_RiverFront

கீபோர்ட் கிறுக்கல்கள்.Where stories live. Discover now