கும்பம் : ஏமாற்றம்

68 10 7
                                    


அன்று முழுதும் பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கி ஐயத்துடன் காத்திருந்தான்.
ஏமாற்றம் வரவேயில்லை,
அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தான் கும்ப ராசிக்காரன்.

பின்னொரு நாள்,
"சரி இன்றும் பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கியப்படித் தயாராக இருப்போம்.
ஏமாற்றம் நம்மை ஏமாற்றுவதாக எண்ணி இன்றும் வராமல் சென்றுவிடும்.
ஏமாற்றத்தைச் சூழ்ச்சியால் ஏமாற்றிவிடலாம்" என்று எண்ணினான்.

ஏமாற்றம் பேர்உருக் கொண்டு கதவைத் தட்டியது.
அதிர்ச்சியுடன் நாட்காட்டியைப் பார்த்தான்.
நாட்காட்டி விநாயகரின் துதிகையிற்கும் தந்தத்திற்கும் இடையில் ஒரு அரைப் புன்னகை ஒளிந்திருந்தது.

அதே புன்னகையுடன் ஏமாற்றத்திற்குக் கதவைத் திறந்து, வரவேற்று அன்புடன் உபசரித்தான் அந்தக் கும்பராசிகாரன்.

கீபோர்ட் கிறுக்கல்கள்.Where stories live. Discover now