2. துருக்கிய ஐஸ்க்கிரீம்காரரின் ரகசிய சுவை கூட்டு பொருட்கள்.

56 6 9
                                    

காலம் ஒரு துருக்கிய ஐஸ்க்கிரீம்காரராகிப் பலருக்குப் போக்குக்காட்டிக் கொண்டிருக்கிறது,

நம் எதிர்பார்ப்புகளை விளையாட்டாய் அலைக்கழிக்கிறது,

சில சமயங்களில் ஐஸ்க்கிரீமை அதுவே ஊட்டி விடுவதுபோல் பாசாங்கு செய்து ஏமாற்றுகிறது,

சில சமயங்களில் ஐஸ்க்கிரீமைக் கையில் கொடுத்துவிட்டுப் பின் பிடுங்கிக்கொள்கிறது,

சில சமயங்களில் வெற்று கூம்புகளைத் தந்து சிரிக்கிறது,

சிலர் எளிதில் சோர்ந்துவிடுகின்றனர், அவர்களிடம் மீண்டும் எளிதில் ஆசையைத் தூண்டி ஏமாற்றுகிறது.

இறுதியில் அனேகமாக அனைவருக்கும் ஐஸ்க்கிரீமைக் கொடுத்துவிடுகிறது...

ஆனால் அப்பொழுது நாம் என்ன ஃப்லேவர் ஐஸ்கிரீம் கேட்டோம் என்பதை மறந்திருப்போம்...

அது இருப்பினும் அந்தத் துருக்கிய ஐஸ்க்கிரீம்காரரின் ஐஸ்கிரீம் இவ்வளவு இனிமையாக இருப்பது ஏன் ???

கீபோர்ட் கிறுக்கல்கள்.Tahanan ng mga kuwento. Tumuklas ngayon