பள்ளிப் பருவம்

116 5 17
                                    


ஸ்கூல் புது இடம் என்பதால் தினமும் போக ஆடம் பிடிப்பாளோ என்று அகி குட்டியை கூட்டிக்கொண்டு போய் ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், அதை வைத்து அனுப்ப ஒரு லஞ்ச் பேக், புது ஷூஸ், சாக்ஸ் எல்லாம் வாங்கியாயிற்று. யூனிபார்ம் இல்லை, கலர் டிரஸ் தான், அந்த செலவு இல்லை.எதிர்பார்த்தது போலவே அகி குட்டி ஸ்கூல் திறக்கும் நாள் வரை தினம் பத்து தடவை புது லஞ்ச் பாக்ஸை பையில் வைப்பதும், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதும், ஷூ மாட்டிக்கொள்வதும், பேகை மாட்டிக்கொண்டு அம்மாக்கு பை சொல்லி பள்ளி விளையாட்டு தான். "நிஜமாவே ஸ்கூல் போகற நாளன்னைக்கும் இப்படியே ஹாப்பியா போகணுமே.." என்று கவலை அவளுக்கு. என்ன தான் குழந்தை வளர்ந்து அடுத்த கட்டமாக ஸ்கூல் போக போகிறாள் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், "அதுக்குள்ள ஸ்கூல் போப்போறாளா!" என்ற ஆச்சரியமும் இல்லாமல் இல்லை.


ஸ்கூல் ஒன்றும் அகி குட்டிக்கு புதிது இல்லை. அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் ரெண்டு வயசில் இருந்தே டேகேர் போகிறாள். காலை ஒன்பது மணிக்கு விட்டு மாலை ஆறு மணிக்கு கூட்டி வருவார்கள். முதலில் அழுதாலும், நிறைய விளையாட்டு சாமான் இருந்ததால் ஜாலியாக போக ஆரம்பித்தாள். சில சமயம் வீடு போர் அடித்தால், "அம்மா என்னை டேகேர்ல விட்ருமா" என்று சொல்லும் அளவு.


"அட, first டே ஸ்கூல்போக நீயே வேகமா எழுந்துட்டியா?" ஆச்சரியமாக கேட்டார்.

"யெஸ் டாடி, என்னை சீக்கிரம் ரெடி பண்ணுங்க, ஸ்கூல்கக்கு டைம் ஆகுது"

"இவ்வளோ ஆர்வமா? சூப்பர் குட்டி"

தாங்களே first நாள் ஸ்கூல் போவது போல வேகமாக கிளம்பினர். ஸ்கூலுக்கு ஸ்பெஷல் ஆக கீரை சான்டவிச் ஸ்னாக்ஸ் வைத்தாள், "உங்க பொண்ணு மட்டும் தாங்க சான்டவிச் ல கூட கீரை சாப்பிடறா!"

"அகிலா, வெல்கம் டு ஸ்கூல், ப்ளீஸ் கெட் இன்" டீச்சர் கூப்பிட்டவுடன் அம்மா அப்பாவுக்கு பை காட்டி உள்ளே சந்தோஷமாக சென்றாள்.

Keerai (கீரை)Where stories live. Discover now