ஸ்கூல் அட்மிஷன்

85 6 10
                                    


"என்னிக்கி கீரை சாப்பிட ஆரம்பிச்சாளோ, அன்னைக்கி ஆரம்பிச்சது. டெய்லி கீரை.. நானும் மனுஷி தானே? ஒரு நாளைப் போல தினம் கீரையை ஆய்ஞ்சு, கழுவி, நறுக்கி சமைச்சு முடிகிறதுக்குள்ள.. ஆன வயசு ரெண்டு, ஆனா அப்டியா நடந்துக்கறா உங்க பொண்ணு?" பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தாள்.

ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, பொண்ணு போற டேகேர்ல பாத்துக்கறவங்க ஏதோ சொல்லி இருக்காங்க..

"ஏதோ என்ன ஏதோ? மேடம், உங்க பொண்ணு ஒரு நாள் கீரை இல்லைனாலும் சாப்பிட மாட்டேங்கிறா. உங்க குழந்தை மட்டும் தான் இங்க இருக்காளா? நாங்க எத்தனை குழந்தைங்களை பாக்கணும் மேடம்? உங்க பாப்பா ஒழுங்கா சாப்பிடணும்னா, அதுக்குத் தேவையானதை நீங்க கரெக்டா வெச்சு விடுங்க மேடம். அதை விட்டுட்டு அடிக்கடி ஏன் என் குழந்தை சரியா சாப்பிடல னு சண்டை போடுறீங்க?" கொஞ்சம் காட்டம் தான், ஆனா இவ மட்டும் அடிக்கடி போய் கம்பளைண்ட் பண்ணலாமா?

என்ன நடக்கிறது என்றே புரியாமல் அகி குட்டி விளையாடிக் கொண்டு இருந்தது. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை எல்லாம் இல்லை, என்ன தினம் கீரை இல்லை என்றால் சாப்பிட மாட்டாள்.

"நான் கூட உனக்கு டெய்லி நைட் பிரிப்பரேஷன் பண்ண ஹெல்ப் பண்றேன்மா, குழந்தைக்கு வேண்டியதை குடுத்து விட்று , பாரு தேவை இல்லாம நீ டென்ஷன் ஆற."

"அப்பா, விளையாட வாப்பா..."

"பாக்கலாம் பாக்கலாம், நீங்க பண்ற ஹெல்ப்ப"

சொல்லியாச்சே, டெய்லி நைட் எவளோ நேரம் ஆனாலும் குடுத்த வாக்கை காப்பாத்திக் கொண்டு இருந்ததால் வண்டி கொஞ்ச காலம் ஸ்மூத் ஆக ஓடிக்கொண்டு இருந்தது.

அகி குட்டியை பெரிய ஸ்கூலில் சேர்க்கிற நேரம் வந்து விட்டது. அப்ளிகேஷன் போட்டு, இன்டெர்வியூ நாள் வந்தது.

ப்ரின்ஸிபல் நல்லவராக தெரிந்தார். "உன் பேர் என்னமா?"

"மை நேம் இஸ் அகி குட்டி. ஐ நோ இங்கிலிஷ் மேம், ப்ளீஸ் டாக் இன் இங்கிலிஷ்." பேப்பா பிக் (Peppa pig) பார்த்து பார்த்து நன்றாக இங்கிலிஷ் பேசும் அகி குட்டி.

ப்ரின்ஸிபல் ஒரு நிமிஷம் என்ன பேசுவது என யோசித்து, சிரித்து விட்டார். "ஓகே, ஐ தாட் யுவர் நேம் இஸ் அகிலா, ஹூ இஸ் திஸ் அகி குட்டி?" (Ok, I thought your name is Akila, who is this Aki kutty?)

"இட்ஸ் மீ, மேம். யு கேன் கால் மீ அகி குட்டி. தட்ஸ் ஹௌ மை parents கால் மீ. ஐ லைக் டு பீ கால்டு தட்." (It's me, mam. You can call me Aki kutty. That's how my parents call me. I like to be called that )

"வாட் எல்ஸ் டூ யு லைக்?" (What else do you like?)

"ஐ லைக் டு பெயிண்ட் ஆன் வால்ஸ், பார்னி டைனோசர் அண்ட் லீஸென்னிங் டு மை மாம் ரீட் புக்ஸ் for மீ அட் நைட்." (I like to paint on walls, Barney dinosaur and listening to my mom read books for me at night)

"ஓஹ் ! வை டூ யு பெயிண்ட் ஆன் வால்ஸ்?" (Oh! Why do you paint on walls?)

"வேர்ல்ட் இஸ் எ கேன்வாஸ், ஆல்சோ வால்ஸ்" (World is a canvas, also walls)

"என்ன புக்ஸ் மேடம் அவளுக்கு படிச்சு காட்டறீங்க?! வேர்ல்ட் இஸ் எ கேன்வாஸ் எல்லாம் 5 வயசு குழந்தை சொல்றாளே?" ப்ரின்ஸிபல் சற்றே சந்தேகமாக பேசினார்.

"ஐயையோ, அது நான் படிச்சுட்டு இருந்த புக் மேம். அவ கேட்டாளேனு ஒரு லைன் படிச்சேன். பட் அவளுக்கு அதுக்கு மீனிங் தெரியும்னு நான் நினைக்கல."

"டூ யு நோ வாட் இஸ் எ கேன்வாஸ், அகி?" (Do you know what is a canvas, Aki?)

"எஸ் மேம், இட் இஸ் எ பிளேஸ் டு பெயிண்ட்." (Yes mam, it is a place to paint)

"வாவ்! இந்த குழந்தையை கண்டிப்பா நாங்க எங்க ஸ்கூல் ல சேர்த்துக்கறோம். நல்லா வளர்த்திருக்கீங்க!"

பெருமை தாங்க முடியலை என்றாலும் நாம எப்போ இப்டி வளர்த்தோம்ங்கிற சந்தேகமும் இருந்தது. மொழிகள் அவளுக்கு இயல்பாக வருகிறது என்றதும் புரிந்தது.

Keerai (கீரை)Where stories live. Discover now