சோறுண்ணு

221 13 37
                                    


"ஏங்க, அடுத்த வாரம் நம்ம அகி குட்டிக்கு 6 மாசம் முடிய போகுதுங்க! அவளோட சோறுண்ணு ரொம்ப பிரமாதமா பண்ணணும்."

"ஓ, கண்ணடிப்பா பண்ணிடலாம் மா , அதுக்கென்ன, நம்ம ஒரே குழந்தை ஆச்சே. என்னென்ன செய்யணும், எப்படினு சொல்லிடு, நான் வாங்க வேண்டியது, கூப்பிட வேண்டியது எல்லாம் பாத்துக்கறேன்."

"நம்ம ஊர்ல உள்ள நெருங்கின சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டா போதும்ங்க. நம்ம அப்பா அம்மா, உங்க அண்ணா, அண்ணி, தங்கை, மச்சான், என் தங்கச்சி, அவ வீட்டுக்காரரு இவ்வளோ பேர் போதும்ங்க. ஆனா ஆள் கம்மினாலும் செய்ய வேண்டிய முறை எல்லாம் நல்லா செஞ்சுடலாம்."

"வாங்க வேண்டியது லிஸ்ட் போடும்மா, அதான் கூப்பிட வேண்டியவங்க லிஸ்ட் ஏற்கனவே குடுத்துட்டியே."

"வழக்கமா சோறுண்ணுனா 4 வகை பச்சை காய்கறி, 4 வகை இங்கிலிஷ் காய்கறி, 4 வகை கீரை, 4 வகை கிழங்கு, அப்புறம் ஸ்வீட், காரம், அப்புறம் எப்பயும் போல சாதம், சாம்பார், ரசம், மோரு ,அப்பளம் எல்லாம் செய்யணும்ங்க . நம்ம குழந்தைக்கும் அப்டியே எந்த குறையும் இல்லாம செஞ்சுடணும்."

"ஏம்மா , இத்தனை செஞ்சு எல்லாம் வீணா போகவா? நீ வேற ரொம்ப கம்மி பேரை தான் கூப்பிடனும்னு சொல்லற. பின்ன எதுக்கும்மா இவ்வளவு சாப்பாடு?"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, எல்லாம் சம்பிரதாயப்படி பண்ணலைனா உங்க அம்மா கேக்குற கேள்விக்கு பதில் நீங்களா சொல்லுவீங்க? எல்லாம் லிஸ்ட் எழுதி தரேன், ஒண்ணு விடாம வாங்கிட்டு வரணும், ஆமா. நீங்களா முடிவு எடுத்து எதையும் விட்டுட்டு வந்து நிக்காதீங்க, வீணா மறுபடி கடைக்கு அலைய வேண்டி இருக்கும், சொல்லிட்டேன்."

"ஐயய்யோ, ரெண்டு பேருக்கு சமைக்க சொன்னாலே 5 பேருக்கு சமைப்பா, இப்போ 15 பேருக்கு சமைச்சா ஊரே சாப்பிடலாம் போல செய்வாளே!" மனதில் நினைத்துக்கொண்டார் , வெளியிலே சொன்னா மட்டும் நம்ம பேச்சு எடுபடவா போகுது?

"ஏங்க, பொன்னாங்கண்ணி, அரை கீரை, தண்டு கீரை, பசலை கீரை னு நாலு வகை கீரை வாங்க சொன்னா, ரெண்டே ரெண்டு வாங்கிட்டு வந்து இருக்கீங்க?" வாங்கி வந்த சாமானை எல்லாம் சரி பார்த்துக்கொண்டே கேட்டாள். "அன்னிக்கே சொன்னேனே, நீங்களா முடிவு பண்ணாதீங்கனு. போய் மத்தத வாங்கிட்டு வாங்க."

Keerai (கீரை)Where stories live. Discover now