பகுதி - 11

162 8 0
                                    

💓💓நினைவெல்லாம்💓💓
                 பகுதி - 11
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

திவா அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றான். திவாவும் ப்ரியாவும் கோயிலில் சந்தித்துக் கொண்டனர்.

திவா : "என்னப்பா ரொம்ப ஏர்லியா வந்திட்டீங்க போல"
ப்ரியா : "இல்லப்பா இப்பதான் வந்தன்"
திவா : "சரி! எங்க போவோம்?"
ப்ரியா : "முதலாவது சாமி கும்பிடுவோம்..! அந்த பழக்கமெல்லாம் கிடையாது என்ன?"
திவா : "கும்பிடலாம்... கும்பிடலாம்..."
ப்ரியா : "தேவை என்னசரி வரும் போதுதான் சாமி கும்பிடுவிங்க போல"
திவா : "தேவையா..! உங்கள பார்த்த அப்புறம்தான் கோயிலுக்கே வாரது"
ப்ரியா : "ஏன்ப்பா...! கோயிலுக்கே போரதில்லயா?"
திவா : "இல்லப்பா நான் போரதில்ல நல்லாதான இருக்கோம் அப்புறம் எதுக்கு சாமிய சும்மா டிஸ்டப் பண்ணிக்கிட்டு"
ப்ரியா : "அப்படியெல்லாம் சொல்லாதப்பா எப்பயும் கோயிலுக்கு போங்க"
திவா : "போகலாம்.. போகலாம்.. நீங்க போய் சாமி கும்பிட்டுட்டு வாங்க"
ப்ரியா : "நீங்க வரலயா?"
திவா : "நான் வரலப்பா நீங்க பொய்ட்டு வாங்க"
ப்ரியா : "உங்கள எல்லாம் திருத்தவே ஏலாது"
திவா : "ஹா...ஹா..."
ப்ரியா : "போடா.." என்று சொல்லி விட்டு ப்ரியா உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தாள்.

திவா : "சொப்பிங் போகலாமா?"
ப்ரியா : "போகலாமே.. போய் என்னத்த வாங்க போறீங்க?"
திவா : "வாங்க போவோம் ஏதாவது பிடிச்சி இருந்தா அத வாங்கலாம்"
              திவா ப்ரியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.

சிறிது நேரம் சென்று கொண்டிருக்கையில்...
ப்ரியா : "திவா"
திவா : "என்ன..! ப்ரியா"
ப்ரியா : "திவா பைக்க கொஞ்சம் நிறுத்துங்க தல சுத்துது வலிக்குது"
                     உடனே திவா பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு
திவா : "என்ன ஆச்சி..! ப்ரியா?"
ப்ரியா : "தெரியலப்பா ரொம்ப வலிக்குது"
திவா : "காலையில சாப்பிட்டிங்கலா?"
ப்ரியா : "ஆமா.. சாப்பிட்டன்.. திவா ரொம்ப வலிக்குது...!"
       அப்படியே திடிரென மயங்கி விழுந்தாள். திவா உடனே ப்ரியாவை தூக்கியவாறு ஆட்டோ ஒன்றில் ஏற்றி வைத்தியசாலை நோக்கிச் சென்றான்.

சிறிது நேரத்தில் வைத்தியசாலை சென்றடைந்து டாக்டரை அழைத்து தகவலை வழங்கினான் பதற்றத்தோடு. உடனே டாக்டர் உடனே வைத்திய அறைக்குள் கொண்டு சென்று சிகிச்சை வழங்கினார். திவா செய்வதறியாது அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ப்ரியாவின் அம்மாவும் அப்பாவும் வந்தனர். இருவரும் திவாவின் அருகில் வந்து
ப்.அப்பா : "தம்பி ப்ரியாவுக்கு என்னாச்சி..!"
திவா : (குழப்பத்தோடு) "யார் நீங்க?"
ப்.அப்பா : "நான்தான் ப்ரியாவோட அப்பா"
திவா : (தடுமாற்றத்தோடு) "உங்களுக்கு எப்படி தெரியும்?"
டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்தார்.

டாக்டர் : "நான்தான் சொன்னன் அவங்ககிட்ட"
திவா : "டாக்டர் நீங்களா..!? உங்களுக்கு இவங்கள தெரியுமா?"
டாக்டர் : "இவங்களுக்கு ரொம்ப வருஷமா நான்தான் பெமிலி டாக்டர்"
திவா : "டாக்டர் ப்ரியாவுக்கு என்ன ஆச்சி"
டாக்டர் : "ப்ரியாவுக்கு ஒன்னும் அவங்க ஆல்ரைட், எல்லாரும் கொஞ்சம் ரூமுக்கு வாங்க"
மூவரும் டாக்டரின் அறைக்குச் சென்றனர்.

திவா : "டாக்டர் ஏன் வர சொனானீங்க சொல்லுங்க"
டாக்டர் : "தம்பி நீங்க யாரு ப்ரியாவுக்கு"
திவா : "டாக்டர் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்"
ப்.அம்மா : "என்ன தம்பி சொல்றீங்க..! ப்ரியா எதுவும் எங்கிட்ட சொல்ல இல்லயே"
ப்.அப்பா : "இது எல்லாம் எப்படி அம்மா அப்பாகிட்ட சொல்லுவாங்க"
டாக்டர் : "இத பாருங்க இதபத்தி பேச இது நேரமில்ல.. இப்ப நான் சொல்ல போர விஷயம் கொஞ்சம் கஸ்டமாதான் இருக்கும் கொஞ்சம் இல்ல நிறைவே.!"

தொடரும்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 26, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைவெல்லாம்..♡♡Where stories live. Discover now