பகுதி - 10

145 6 2
                                    

💓💓நினைவெல்லாம்💓💓
                 பகுதி - 10
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

குமாரும், சிவாவும் ப்ரியாவிடம் விசாரித்தனர். ப்ரியாவும் நடந்தவற்றை கூறினாள். திடிரென மேனேஜர் வெளியே வந்து "அமைதியாக வேலை செய்ய சொல்லி கத்திவிட்டு உள்ளே சென்றான்"

திவா தனது வீட்டினுள் கோபத்துடன் நுழைந்தான்.
அம்மா : "என்னடா திவா போனதும் வந்துட்ட என்னாச்சி?"
பதில் சொல்லாமல் கோபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். சில நொடிகளில்,
திவா : "அந்த மேனேஜர் வேலையில இருந்து தூக்கிட்டான் அம்மா"
அம்மா : "ஏன்டா! என்னாச்சி? நீ என்ன பண்ண?"
திவா : "கொஞ்சம் கூட மரியாத இல்லாம பேசினான் அம்மா அதுதான் அடிச்சிட்டன்"
அம்மா : "இனி மேனேஜர்னா அப்படித்தான் நாமதான் பொறுமையா இருக்கனும்"
திவா : "எவ்வளோதாமா பொறுக்குறது, சட்டைய புடிச்சிட்டான் கோவம் வந்துட்டு அடிச்சிட்டன்"
அம்மா : "அது சரி பொறுமையா இருந்தா கோழையினு நெனச்சிட்டான் போல நீ செஞ்சதுதான் சரி, நீ யோசிக்காதப்பா இது மட்டுமா வேல எவ்வளவோ வேல இருக்கு"
          சிறிது நேரத்தில் சிவா திவாவுக்கு போன் பண்ணினான்.

திவா : "சொல்லு சிவா"
சிவா : "ஏன்டா இப்படி பண்ண!"
திவா : "பின்ன என்னடா பண்ண சட்டைய பிடிச்சிட்டான் மச்சான் அதுதான் அடிச்சிட்டன்"
பேசிக் கொண்டிருக்கும் போது மேனேஜர் வெளியே வந்தான்.
சிவா : "மச்சான் நான் வைக்கிறன்டா நேர்ல பேசலாம் அவன் வாறான்" என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணினான்.

சிவா : "குமாரு இவனால ஆபிஸ்ல நிம்மதி இல்லாம பொய்ட்டுடா!"
குமார் : "ஆமாடா என்னடா பண்ணலாம்"
சிவா : "பேசாம 3D மூஞ்சனுக்கு கோல் பண்ணி சொல்லிடலாம்டா அப்பதான்டா சரி, பாவம்டா திவா"

ஆபிஸ் வேலை நேரம் முடிந்து எல்லோரும் சென்றனர். சிவாவும், குமாரும் திவாவின் வீட்டிற்கு சென்றனர். திவா இருவரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றான். இருவரும் நடந்ததை விசாரித்தனர், திவாவும் விளக்கமாக கூறினான்.

சிவா : "மச்சான் 3D மூஞ்சனுக்கு போன் பண்ணி சொல்லனும்டா இவனால ஆபிஸ்ல நிம்மதி இல்ல!"
குமார் : "சிவா சொல்றதுதான்டா சரி"
திவா : "இல்லடா விடு வேணா"
குமார் : "இல்ல மச்சான் சொல்லதான் வேணும்"
உடனே சிவா மேனேஜருக்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் கூறினான். அவர் நாளை வாரதாக சொன்னார். திவாவையும் வர சொல்லி இருந்தார்.

நினைவெல்லாம்..♡♡Where stories live. Discover now