29 சீண்டல்...

Depuis le début
                                    

அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் குஷி.

"எப்பவும் சந்தோஷமா இரு" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டார் ரத்னா.

குஷியும், லாவண்யாவும் அவர்கள் கணவர்களின் அறையை நோக்கி சென்றார்கள்... அவர்களது வாழ்வை நோக்கி... அவர்களது எதிர்காலத்தை நோக்கி...!

"ஆல் தி பெஸ்ட் பேபி... டேமேஜ் இல்லாம வெளியே வர பாரு" என்று கூறி குஷியை மென்று விழுங்க வைத்தாள் லாவண்யா.

அவர்கள் அறைகளுக்குள் நுழைந்தார்கள். லாவண்யாவை மலர் தூவி வரவேற்றான் நந்தா. ஆனால், அர்னவ் அவனது அறையில் இல்லை. நிம்மதி பெருமூச்சு விட்டு பால் தம்ளரை இனிப்புகள் வைக்கப்பட்டிருந்த மேசையின் மீது வைத்தாள் குஷி. 

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்ட அவள், சிலை போல் அசையாமல் நின்றாள். தன்னை நோக்கி வரும் காலடி சத்தத்தை அவளால் உணர முடிந்தது. அர்னவ் தனக்குப் பின்னால் வெகு நெருக்கமாய் நிற்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதில்,

"ஹாய்..." என்றான்.

தன்னை சமாளித்துக் கொண்டு அவனை நோக்கி திரும்பினாள். வியர்த்திருந்த அவள் முகத்தைப் பார்த்த அவன்,

"ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்.

"எனக்கென்ன?" என்றாள்.

"ஆங்... நீ தான் ரொம்ப தைரியசாலியாச்சே... நீ ரொம்ப டயர்டா இருக்க. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து, லெஃப்ட் சைடு படுத்துக்கோ" என்றான்.

நம்ப முடியாமல் நின்றிருந்தாள் அவள். அவன் ஒன்றும் செய்யவில்லை... ஒன்றுமே செய்யவில்லை...!

"என்ன்னன...? போ..." என்றான்.

"ம்ம்ம்"

அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த தனது பையில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு, குளியலறைக்கு சென்றாள். அவள் திரும்பி வந்தபோது அவன் தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவன் கூறியதை மறந்துவிட்டு, கட்டிலில் வலப்புறம் படுத்துக் கொண்டாள்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Où les histoires vivent. Découvrez maintenant