6 பெண்களை வெறுப்பவனா?

326 32 2
                                    

6 பெண்களை வெறுப்பவனா?

தன் கைபேசிக்கு வந்த புதிய எண்ணை பார்த்த அர்னவ், வழக்கம் போல் திட்டித் தீர்க்க தயாரானான்.

"யார் பேசுறதுன்னு கேக்குறேன்ல?" என்றான் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய்.

அவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

"இங்க பாரு... நீ யாருன்னு மட்டும் நான் கண்டுபிடிச்சேன், நீ ரொம்ப வருத்தப்படுவ" என்றான் உரத்த குரலில்.

அவனது அந்த நடவடிக்கை, குஷிக்கு குழப்பத்தையும், அதிர்ச்சியையும் தந்தது. அவனுக்கு என்ன தான் பிரச்சனை?

"நீ யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா? சில நிமிஷத்துல அதை என்னால் செய்ய முடியும். எப்ப வேணும்னாலும் நான் உன் வீட்டுக்கு வந்து, உங்க அப்பாகிட்ட அவரோட பொண்ணு எப்படிப்பட்டவள்னு சொல்லுவேன்"

"ஐ அம் வெயிட்டிங் அல்லவ்...! வந்து எங்க அப்பாகிட்ட அவரோட பொண்ணு எப்படிப்பட்டவள்னு சொல்லு. என்னைப் பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்கேன்னு நானும் கூட தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப க்யூரியஸா இருக்கேன்"

குஷியின் குரலைக் கேட்டு, தன் தாடைகளை இறுக்கி, கண்களை மூடினான் அர்னவ். அவன் என்ன காரியம் செய்து விட்டான்...!

"குஷி, நான் என்ன நெனச்சேன்னா..."

"நான் நம்ம ஓல்ட் மெமரிஸ் பத்தி நெனச்சேன். நம்மளோட ஹேவ்லாக் ட்ரிப்பை பத்தி யோசிச்சேன். அதனால தான் உனக்கு கால் பண்ணேன். உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா? இல்ல, அதைப்பத்தி எல்லாம் பைத்தியக்காரி மாதிரி நான் மட்டும் தான் நினைச்சுகிட்டு இருக்கேனா?"

பதில் பேசவில்லை அர்னவ். என்ன பதில் கூற முடியும்? அவனும் அவற்றையெல்லாம் அடிக்கடி நினைப்பதுண்டு என்றா? அல்லது, இல்லை என்று பொய் உரைப்பதா?

"ரொம்ப நாளுக்கு அப்புறம் நீ நிறைய பேசி நான் இன்னைக்கு கேட்டேன்... எதிர்பாராத விதத்துல...! நான் அசந்து போயிட்டேன் தெரியுமா...!"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now