23 குஷியின் மறுப்பு

Start from the beginning
                                    

"நீ சொன்னதை வாபஸ் வாங்கிக்கோ" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"நான் சொன்ன எதைப்பத்தி நீ பேசிகிட்டு இருக்கேன்னு எனக்கு புரியல"

அவள் ஏதோ சொல்ல முயல, தன் கையை காட்டி அவளை அமர்த்தி விட்டு,

"நான் ஒரு தடவை சொன்னா சொன்னது தான். அதை திரும்பி வாங்குற பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது" என்றான்.

"மத்தவங்களுக்காக ஒண்ணும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். உன்னை பத்தி எனக்கு தெரியும்"

"உனக்கு என்னை பத்தி தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தா, நான் சொன்னதை வாபஸ் வாங்க சொல்லி நீ நிச்சயம் சொல்லியிருக்க மாட்ட. ஏன்னா, உயிரே போனாலும் நான் அதை செய்ய மாட்டேன்"

"இங்க பாரு, இது ஒன்னும் விளையாட்டு இல்ல... வாழ்க்கை. முரண்பட்ட ரெண்டு பேர் ஒன்னா சேந்து சந்தோஷமா வாழவே முடியாது"

"முரண்பட்ட ரெண்டு பேரா? நீ யாரைப் பத்தி பேசுற?" என்றான் முகத்தை சுருக்கி.

"இதெல்லாம் உனக்கு கிண்டலா தெரியுதா?"

"நான் கிண்டல் பண்றேன்னு நினைக்கிறியா? நீ என்ன சொன்ன, இது விளையாட்டு இல்லன்னு தானே? விளையாட்டோ, வாழ்க்கையோ... என்னை பொறுத்த வரைக்கும் எல்லாத்தையும் ஒரே மாதிரி தான் டீல் பண்ணுவேன்... ரொம்ப சீரியஸா...! விளையாட்டா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி, என்னோட எண்ணமெல்லாம் ஒன்னே ஒன்னு தான்... ஜெயிக்கணும்!"

"அது உன் கூட ஆடுறவங்களையும் பொறுத்த விஷயம். அதை மறந்துடாத"

"நம்ம ரெண்டு பேரும் எதிர்ல நின்னு ஆட போறதில்ல... ஒரே பக்கம் தானே நின்னு ஆட போறோம்"

"அதுக்கு புரிதல் தேவை. அது நம்மகிட்ட கிடையாது"

தன் கைகளை கட்டிக் கொண்ட அவன்,

"தெளிவா சொல்லு, இப்போ உனக்கு என்ன வேணும்?" என்றான்

"எல்லாத்தையும் நிறுத்து... இந்த கல்யாணத்தை நிறுத்து"

"மாட்டேன்" என்றான் தெளிவாய்.

"ஆனா ஏன்?"

"முன்வச்ச காலை பின் வைக்கிறது என் வரலாறுலயே கிடையாது. உனக்கு அதுல சம்மதமா இல்லையான்னு எனக்கு கவலை இல்ல. இந்த கல்யாணத்தை யாராலையும் நிறுத்த முடியாது (என்று சற்று நிறுத்திய அவன்) நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ, எதுக்காக நீ சும்மா இருந்த? அப்பவே எல்லார்கிட்டயும் சொல்லிட வேண்டியது தானே...? ஏன் அமைதியா இருந்த?" என்றான்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now