21 நடக்க விடமாட்டேன்

Start from the beginning
                                    

"நான் வேணா சிஸ்டர்கிட்ட பேசட்டுமா?"

"வேணாம்... இது அதுக்கான நேரம் இல்ல. நடக்கப் போற நான்சென்சை நான் முதல்ல நிறுத்தணும். அதை முதல்ல முடிக்கிறேன்"

"உன்னால முடியலைன்னா சொல்லு வாத்தியாரே... அவன் மேட்டரை நான் முடிச்சிடுறேன். அவன் பகுலை பிகில் ஊதி, செவுலை அவுல் தின்ன வைக்கிறேன்...! நம்ம புள்ளிங்கோ அவனை ஆள் அட்ரஸ் இல்லாம செஞ்சிட்டுவானுங்கோ"

"வேண்டாம். இதை நான் பார்த்துக்கிறேன்"

சக்தியிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினான் அர்னவ். அவன் இந்த முறை எதுவும் மறுத்து பேசாததை எண்ணி சந்தோஷப்பட்டான் சக்தி. பார்க்கலாம்... ஒருவேளை, அர்னவ் தன் முயற்சியில் தோற்றால், அவன் தான் இருக்கவே இருக்கிறானே...! என்று எண்ணினான் சக்தி.

சக்தி கூறிய விஷயம்  அர்னவ்க்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்னேஷை அந்த குறிப்பிட்ட திரையரங்கில் இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை என்று சக்தி கூறினானே. குஷியின் குடும்பத்தாரை நம்ப வைக்க அவன் வேண்டுமென்றே அங்கு செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். இந்த திருமணத்தை அவன் எப்படி தடுக்கப் போகிறான்? எப்படியும் அதை செய்தே தீர வேண்டும்.

தனது வண்டியை கிளப்பிய அர்னவ், அந்த கடற்கரையில் அமைந்திருந்த அஷ்டலட்சுமி கோவிலுக்குள் ஷஷியும் கரிமாவும் செல்வதை பார்த்தான். குஷி எங்கே? அவளது பெற்றோருடன் அவள் வரவில்லை என்றால், அவள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். தனது வண்டியின் வேகத்தை கூட்டி, வீட்டை நோக்கி விரைந்தான். இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விட அவன் தயாராக இல்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரிய வேண்டும்.

கோவிலுக்குள் நுழைவதற்கு முன், கரிமாவை தடுத்து நிறுத்திய ஷஷி, அவரை அங்கு அமரச் செய்து, தானும் அமர்ந்து கொண்டார். அவரை கேள்விக்குறியுடன் பார்த்தார் கரிமா.

"நம்ம ஏதாவது தப்பு செய்றோமா கரிமா?"

"நானும் கொஞ்சம் பதட்டமா தான் இருந்தேன். ஆனா, இந்த விஷயத்த கேள்விப்பட்டு அர்னவ் எவ்வளவு கோபப்பட்டான்னு தெரிஞ்ச போது, நம்ம சரியான வழியில தான் போறோம்னு எனக்கு தோணுது"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now