8 பிடித்தவனுக்காக

Start from the beginning
                                    

"குஷி, உனக்கு நாட்டுக்கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியாதே. நான் வில்லேஜ்ல இருந்து தான் வரேன்னு உனக்கு தெரியும் தானே? அப்ப கூட இதைப்பத்தி நீ எங்ககிட்ட ஒரு தடவை கூட சொன்னதே இல்லையே...?"

"இல்ல, இது எனக்காக இல்ல. என் ஃபிரண்டுக்காக"

"ஓகே ஓகே.. நான் நாளைக்கு வரும் போது கண்டிப்பா கொண்டு வரேன்"

"தேங்க்யூ பேபி" என்று திருப்தியுடன் அழைப்பை துண்டித்தாள் குஷி.

மறுநாள் மாலை

குஷி பேருந்து நிலையத்தில் நுழைந்த போது, அங்கு அர்ச்சனாவுடன் காத்திருந்தாள் லாவண்யா.

"லாவண்யா, நீ இங்க என்ன பண்ற?" என்றாள் குஷி.

"அது நான் கேட்க வேண்டிய கேள்வி. ஒவ்வொரு தடவையும் அர்ச்சனா ஊருக்கு போயிட்டு வரும் போது அவளை நான் தான் பிக்கப் பண்ணுவேன். இந்த இடத்துக்கு நீ தான் புதுசு" என்று அர்ச்சனாவுடன் ஹை ஃபை தட்டிக்கொண்டாள் லாவண்யா

"ஆமாம், நீ என்கிட்ட ஒரு தடவை சொன்ன. நான் தான் மறந்துட்டேன்"

"அது சரி, என்ன விஷயம், சிக்கன் எல்லாம் வாங்கிக்கிட்டு போற?"

"ஆமாம்... அர்னவுக்காக சமைக்க போறேன்"

"நான் இதை எதிர்பார்த்தேன்... உனக்கு இந்தக் கோழியை சமைக்க தெரியுமா?"

"நான் நிறைய தடவை சிக்கன் சமைச்சிருக்கேன்"

"நாட்டுக்கோழியை அப்படி சமைக்க மாட்டாங்க. அதுக்குன்னு சில டெக்னிக் இருக்கு. அதை அப்படி சமைச்சா சூப்பரா இருக்கும்"

"கடவுளே! அப்படியா...?  எனக்கு அது தெரியாதே"

"கவலைப்படாதே! அர்ச்சனா அதுல எக்ஸ்பர்ட். அவ உனக்கு ஹெல்ப் பண்ணுவா"

"இல்ல இல்ல, நீ எனக்கு எப்படின்னு மட்டும் சொல்லு. நானே சமைக்கிறேன்"

லாவண்யாவும் அர்ச்சனாவும் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

"சரி, அப்படின்னா வா, உங்க வீட்டுக்கு போகலாம்.  உனக்கு இதை எப்படி சமைக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டு நாங்க கிளம்பறோம்" என்றாள் லாவண்யா.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now