7 உண்மை அன்பு

Começar do início
                                    

"ஒன்னும் பிரச்சனை இல்ல, குஷி. நான் ஹால்ல தான் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்" என்றான்.

அவன் உள்ளே செல்ல, அனைவரும் அவனை பின்தொடர்ந்து சென்றார்கள். உள்ளே வந்த அவர்கள், அர்னவ் வரவேற்பறையில் அமர்ந்து தனது மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்து நின்றார்கள். குஷியும் கூட வியப்படைந்தாள்.

"ஹாய் அல்லவ்" என்றாள் குஷி.

அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"நீ இங்க என்ன பண்ற அரு?" என்றான் நந்தா.

"ஏன், நான் இங்க இருந்தா உனக்கு ஏதாவது பிரச்சனையா?"

"இல்ல, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நாங்க ஸ்டார்ட் பண்ணிட்டோம்னா உனக்கு தான் பிரச்சனை. அதனால தான் சொன்னேன்"

அர்னவின் கவனம் மீண்டும் மணிக்கணினியின் மீது சென்றது என்று கூறுவதற்கு இல்லை... அவன் கண்கள் மட்டும் சென்றது என்று வேண்டுமானால் கூறலாம்.

அங்கிருந்த சோபாக்களை பிள்ளைகள் அமர்ந்து நிரப்பினார்கள். தங்களுக்கு அமர இடமில்லாமல் குஷியும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அரு, நீ உன்னோட ரூமுக்கு போயேன்" என்றான் நந்தா.

"பரவாயில்ல விடு நந்து, நம்ம டைனிங் சேரை எடுத்துக்கலாம்" என்றாள் குஷி.

"நல்ல ஐடியா" என்று உணவு மேசையிலிருந்து இரண்டு நாற்காலிகளில் கொண்டு வந்து போட்டான் நந்தா.

அர்னவ் அமர்ந்திருந்த ஒற்றை சோபாவின் பக்கத்தில் நாற்காலியை போட்டு, அதன் கைப்பிடியில் வசதியாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் குஷி. அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் நந்தா.

பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுக்க வந்த ரத்னா, அந்த அமளிக்கு இடையில் அர்னவும் அமர்ந்திருந்ததை பார்த்து வியந்தார். அவனது முகத்தில் வெறுப்புக்கான அறிகுறியே தென்படவில்லை. நிச்சயம் அது வித்தியாசத்தின் சாயல் தான்!

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Onde histórias criam vida. Descubra agora