❤ சிறுநகை 100

871 32 43
                                    

"வர்ணாலயம்" என்ற பெயருடைய கதிருடைய கனவு சாம்ராஜ்யத்தின் கதவுகளை திறந்து வைத்த மாணிக்கவேல் அதனுடைய நிலையில் கலர் பொடிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த பலூன்களை உடைத்து விட நிறைய வர்ணங்கள் அந்த ஸ்கூலின் வாயிலில் தெறித்து சிதறியது.

வர்ணாலயத்தின் வகுப்புகளுக்காக முன்பதிவு செய்த அனைவருக்கும் ஒரு லைவ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அந்த விழாவை பார்ப்பவர்கள் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

தங்களது பட்டு பாவாடைகள்  சரசரக்க இரண்டு குத்துவிளக்குகளுடன் மாணிக்கவேலுக்குப் பின்னால் அடியெடுத்து வைத்த அவரது பேத்திகள் அந்த பெரிய ஹாலில் நிதானமாக நடந்து சென்று பிள்ளையார், லஷ்மி, சரஸ்வதி இந்த மூன்று தெய்வங்களும் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முன்னால் தங்களுடைய கையில் வைத்திருந்த விளக்கை கொண்டு சென்று வைத்தனர்.

பாகேஸ்வரி ஒரு விளக்கை ஏற்ற, சுமலதா ஒரு விளக்கை ஏற்றி அனைவரும் முதல் வேலையாக கடவுளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

எனக்கென்ன என்று அங்கே பார்வையாளராக நின்று கொண்டிருந்த ஜெபாவிடம் சன்னமான குரலில், "டேய் சாமி கும்பிடு!" என்று சொன்னாள் சம்யூ.

"உனக்கு தெரிஞ்ச சாமியவா? எனக்கு தெரிஞ்ச சாமியவா?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவள்,

"இங்க நாம எந்த சாமி பெரிசுன்னு
பட்டிமன்றமெல்லாம் நடத்த முடியாது ஜெபா! அன்பு தான் கடவுள்னு சொல்றாங்க.... ஸோ நீ பேசாம இந்த ஸ்கூல்ல எப்பவும் அன்பு நிறைஞ்சு இருக்கணும்னு கும்பிட்டுடேன்!" என்றாள்.

அவளை ஒருமாதிரியாக பார்த்து வைத்தவன் கண்களை மூடிக் கொண்டு தன்னுடைய வாய்க்குள் ஏதோ ஜபிக்க ஆரம்பித்து விட்டான்.

"பாஸ்..... லைவ் போயிட்டு இருக்கு; ஸோ இந்த அக்கேஷன்ல ஒரு மெசேஜ்!" என்று கண்சிமிட்டி கேட்க வினோதினி ஆச்சரியமான பார்வையுடன்,

"என்ன பாஸா? கதிர நீ அப்டித்தான் கூப்டுவியா சஞ்சு?" என்று மகனிடம் கேட்டார்.

🎉 You've finished reading சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ 🎉
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now