❤ சிறுநகை 99

310 21 12
                                    

கதிருடைய "வர்ணாலயம்" ட்ராயிங்க் இன்ஸ்டிடியூட் இரண்டு நாட்களில் திறக்கப்பட இருந்தது.
ஆலென் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்திலும் சுற்றி ரோட்டில் படம் வரையும் கலைஞர்கள் சிலரது விபரங்களை கதிருக்கு அறிமுகம் செய்திருந்தார். அவர்களிடம் கதிர் நேரில் சென்று பேசி அவனுடைய ட்ராயிங் இன்ஸ்டிடியூட் பற்றி அவர்களுக்கு விளக்கி 24 பேருக்கு இலவசமாக வரைதல் பயிற்சி, தங்குமிடம், உணவு இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்திருந்தான்.

ஜெபாவின் நிச்சயதார்த்தம் நேற்று தான் நடந்து முடிந்திருந்தது. அவனது நிச்சயதார்த்த வைபவமும், ட்ராயிங்க் ஸ்கூல் திறப்பு விழாவும் அருகருகே வைத்துக் கொண்டால் இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஒரேடியாக வந்து போக சௌகர்யமாக இருக்கும் என்பது கல்பனாவின் விருப்பம். அதனால் இரண்டு சுப நிகழ்வுகளுக்கும் அருகருகில் சேர்த்தே தேதி வைத்து விட்டார்கள்.

சஞ்சீவ் ஒருவாரத்திற்கு முன்பாகவே இங்கு நிறைய பெட்டிக்களுடன் புறப்பட்டு வந்து விட்டான். கதிருடைய வேலைகளை சஞ்சீவ் பார்த்துக் கொள்ள ஆலெனுடைய வேலைகளை கதிர் பார்த்துக் கொண்டான். ஜெபா வழக்கம்போல ஜாலியாக தனக்கு திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சியில் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான்.

சஞ்சீவ் ஏற்கனவே கதிரிடம் சொல்லியிருந்தது போல் ஒருவாரத்திற்கு முன்பாக பொள்ளாச்சியில் இருந்து வந்த போதே கதிருடைய ஓவியத்தை விற்றதற்காக அத்தனை டாக்குமெண்டுகள், பேங்க் ஸ்டேட்மெண்ட் ஆஃப் அக்கவுண்ட்ஸ், கதிருடைய வருமானம் கொஞ்சம் உயர்ந்ததில் இருந்து அவன் பெயிண்டிங்க் விற்ற கிடைத்த பணத்திற்காக
கட்டியிருந்த வரிக்கணக்கு, அவனுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீட்டை விற்ற பணம், ட்ராயிங்க் ஸ்கூலுக்கென இன்று வரை செலவான தொகை என இந்த கணக்குகளுக்காக வருடக்கணக்காக சஞ்சீவ் ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தையாவது செலவழித்திருப்பான் என்று தோன்றியது.

தான் கதிரேசனுடைய கணக்குகளை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து அவனுடைய வருமானத்தின்  க்ராஃப் ஸ்கேல் ஆகிய பல விஷயங்கள் அடங்கிய ஒன்பது பெட்டிகளை சந்தனா மற்றும் பாகேஸ்வரியிடம் ஒப்படைத்தான் சஞ்சீவ்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now