❤ சிறுநகை 97

350 25 5
                                    

"யாரைக் கேட்டு இப்டி ஒரு முடிவுக்கு வந்தீங்க? ஏதோ லன்ஞ்ச்க்கு போகப்போறோம்னு சொன்னவங்க அது பிரகாஷ் அங்கிளோட வீட்டுக்கு தான்னு ஏன் எங்கிட்ட சொல்லல? எங்க எல்லாருக்கும் சம்யுக்தா ஓகே.... நீ அவ கூட பேசிட்டு ஒரு முடிவுக்கு வான்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம்,

"போய் பேசிட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுன்னு அர்த்தம். இது கூடயா தெரியல உனக்கு?" என்று ஆப்பிளை கடித்து சாப்பிட்ட படி தன்னுடைய தம்பியை வாரிக் கொண்டிருந்தாள் சந்தனா.

"சந்து நீயும் என்ன இப்டி லூசு மாதிரி பேசுற? அவ கிட்டத்தட்ட ஒரு கோடீஸ்வரி சந்து; நான் அவளோட தாத்தாட்ட வேலை பார்த்துட்டு இருக்குற ஒரு எம்ப்ளாயி?" என்று சொன்னவனிடம் கதிர்,

"சேகர் அப்டித்தானடா நானும் உங்க அக்காவும் இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலையா?" என்று கேட்டான்.

"ஐயோ அத்தான்..... உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது! அந்த பொண்ணுக்கு இப்ப கல்யாணம்லாம் தேவையில்ல அத்தான்; அவங்க அப்பா அம்மாவோட இருக்கும்போது லோன்லினெஸ்ஸோட ரொம்ப ஸஃபர் ஆகியிருக்கா! அதுனால தான் இப்டி இன்ஸ்டன்ட் கல்யாணம், இன்ஸ்டன்ட் மாப்பிள்ளன்னு சும்மாயிருக்குற என்னைய புடிச்சு வச்சிக்கிட்டு எல்லாரும் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க!" என்றான்.

"சரிடா.... அப்டியே அவ KL பிடிக்காம, அவ அப்பா அம்மாவோட இருக்கப்பிடிக்காம இங்க வந்ததா இருக்கட்டுமே? இப்ப என்ன எதுக்கு? அவ ஒண்ணும் டீன்ஏஜ் பொண்ணு இல்லையே? உனக்கும் இப்ப கல்யாணம் பண்ணி வைக்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல! அப்புறம் இந்த விஷயத்துல உனக்கு என்ன பிரச்சன? உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா?" என்று கேட்ட சந்தனாவிடம் ஆமென்றும் சொல்லாமல் இல்லையென்றும் சொல்லாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தான் ஜெபா.

"மோனே.... நாங்க பிரகாஷ் ஸார் வீட்ல இருக்கும் போது நீ அவருக்கு கால் பண்ணுன தானே? அவர்ட்ட சம்யுக்தா பத்தி விசாரிச்ச தானே? அந்தப் பொண்ணை நினைச்சு உனக்கு இருக்குற இந்த அக்கறை ஏன்டா நாளைக்கு உங்களுக்குள்ள காதலா மாறக்கூடாது?" என்று கேட்ட ஆலெனிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now