❤ சிறுநகை 96

294 25 3
                                    

அன்று ஆலெனும் சுமலதாவும் பிரகாஷ் வீட்டிற்கு மதிய விருந்துக்காக போயிருந்தனர். ஆலென் சுமலதா இருவரையும் பிரகாஷ் இன்று தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்திருந்தார். 

"எந்துக்கு ஆலென் திடீர்னு இந்த விருந்தெல்லாம்? நம்ம ரெண்டு பேரையும் கூப்ட்டு சாப்பாடு போட்டு என்னத்த புள்ளைய வளத்து வச்சுருக்கீங்கன்னு திட்டப் போறாரோ?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,

"என்னை விட வயசுல பெரியவர்மா! வீட்டுக்கு சாப்ட வாங்கன்னு கூப்டுறாரு! அவர் கிட்ட போயி எதுக்கு ஸார் சம்பந்தமே இல்லாம இப்ப இந்த விருந்துன்னா கேக்க முடியும்? எந்த விஷயமா இருந்தாலும் அங்க போனா என்னன்னு தெரிஞ்சுட்டுப் போகப் போவுது! நீ சொன்ன மாதிரி சோத்தப் போட்டுட்டு, என் புள்ளையப் பத்தி ஏதாவது தப்பா பேசுனாருன்னா ஜெபாவுக்கு நம்ம வேற வேல பாத்துக் குடுப்போம்..... கர்த்தரே..... A Family Man live like a Beggar and Die like a King ங்குற ஒரு வாசகத்துல இம்ப்ரெஸ் ஆகி நம்ம மரணம் ராஜாவோட மரணம் மாதிரி இருக்கும்ங்குற ஆசையில
உன்னைய கல்யாணம் பண்ணுனேன் சுமா.... ஆனா வாழ்க்கை பின்னால ஓடி ஓடியே டையர்டு ஆகிட்டேன்!"

"இப்ப தான் என் மாப்பிள்ள ஒரு திருப்திகரமான வேலையக் குடுத்துருக்காருன்னு நினைச்சு அத செஞ்சுட்டு இருந்தா, அதுக்குள்ள உன் பையன் ஒரு பஞ்சாயத்த இழுத்துட்டு வர்றான். என்ன நடக்குமோ தெரியல. போய்ப் பார்ப்போம் வா!" என்று சொன்னவர் தன்னுடைய மனைவியிடம்,

"அப்டி என்ன கஷ்டப்படுற நீ? எப்டி நீ இப்டி பேசலாம் ஆலென்?" என்ற
திட்டுகளை வாங்கியபடி அவரை அழைத்துக் கொண்டு பிரகாஷின் வீட்டிற்கு சென்றார்.

"வா ஆலென்... பாத்து ரொம்ப நாளாகிடுச்சு! எப்டியிருக்க?" என்று கேட்டு ஆலெனை கட்டிக் கொண்ட பிரகாஷ் சுமலதாவிடம் வணக்கம் கூறி "உள்ள வாங்கம்மா!" என்று அழைத்தார்.

ஒரு வீட்டினுடைய செருப்பு ஸ்டாண்ட் இருக்கும் நிலையை வைத்தே இந்த வீடு எந்த வகையிலான சுத்தத்தில் இருக்கும் என்று கணிக்கும் சுமலதா அந்த வீட்டினுடைய செருப்பு ஸ்டாண்டின் ஒழுங்குக்கு 9.9 மதிப்பெண்கள் கொடுத்தார்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now