❤ சிறுநகை 95

281 22 3
                                    

"டேய் தம்பி ரொம்ப வேலையா இருக்கியா?" என்று தன்னுடைய சட்டைக்குள் காற்றை ஊதிக் கொண்டு வியர்த்து வழிந்தபடி வந்தவனைப் பார்த்தவள் அவனை முறைக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த ஒரு முக்கியமான வேலையை மறந்து விட்டு அவன் வாயைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"ரொம்ப வெயில் இன்னிக்கு.... பேங்க் போயிட்டு வர்றதுக்குள்ள என் எனர்ஜி எல்லாம் மொத்தமா காலியாகிடுச்சு! நீ ஃப்ரீயா இருக்கியா? வேலையா இருக்கியாடா?" என்று கேட்டவனிடம்,

"இப்ப என்ன வேணும் உனக்கு?
கிச்சனுக்குள்ள போய் ஃப்ரிட்ஜ்ல இருந்து உனக்கு ஐஸ்வாட்டர் எடுத்து தரணும்... அதான? எடுத்துட்டு வந்து தர்றேன். அதுக்குப் பதிலா நீ என் ஸ்டோரிக்கு ஒரு ஸீன் சொல்றியா?" என்று கேட்டாள் சம்யுக்தா.

"இப்டி அடுத்தவங்க அறிவ புடுங்கி சீன் எழுதிட்டு, இத நானாத் தான் எழுதுனேன்னு சொல்றதுக்கு உனக்கு கொஞ்சம் வெக்கமா இருக்காதாடா தம்பி? இதுக்கு பதிலா நீ பேசாம மலேசியாவுக்கே திரும்பப் போயிடலாம்!" என்று சொன்னவனை கண்களில் வலியுடன் பார்த்தாள் சம்யுக்தா.

"ஏன் இப்டி நாளைக்கு செத்துப் போகப்போறவ மாதிரி லுக் விடுற?" என்று கேட்டவனிடம்,

"அப்பா லாயர்; அம்மா பீரியாட்ரீசியன்.... சும்மா பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காத; அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இருந்தும் நான் அநாதை தான்! 
வீட்ல முழு நேரமும் தனியா தான் இருக்கணும். ஏதோ கையில கிடைச்ச பயோமெடிக்கல் கோர்ஸ்ல சேந்து ஒரு டிகிரி! அதுவும் கருமம்.... முழு டெடிகேஷனோட எல்லாம் படிக்கல.
டிகிரி வாங்கிட்டும் கொஞ்ச காலம் அங்க பல்லைக் கடிச்சுட்டு சமாளிச்சேன். அதுக்கு மேல அங்க இருக்குறதுக்கே பிடிக்கல! இருக்கறதுல அர்த்தமும் இல்லன்னு தோணுச்சு..... அதான் இங்க வந்துட்டேன்; என் கஷ்டம் என்னன்னு தெரியணும்னா நீ
ஒருநாள் பூரா பூட்டுன வீட்டுக்குள்ளயே ஒக்காந்து பாரு... அப்பத் தெரியும் உனக்கு என்னோட பிரச்சனையும்; அதோட சீரியஸ்னெஸூம்.....!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now