❤ சிறுநகை 93

Start from the beginning
                                    

பாவம் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தவளிடம்,

"சஞ்சீவ் உன்னையவும் இங்க வெரட்டி விட்டுட்டானா? நீ என்ன சாப்டுற? மினுவையும் கூட கூட்டிட்டு வந்துருக்கலாம்ல குணா?" என்று கேட்ட கல்பனாவிடம்,

"அட சும்மாயிருங்கக்கா! இப்பதான் அவ பேக்டரி டேவுக்கு லீவ் போட்டா! இங்க வர்றதுக்கு அவளுக்கும் ஆசை தான்; சஞ்சீவோட மொறைப்புக்கு பயந்துட்டு தான் புள்ள ஒழுங்கா நீங்க மட்டும் போயிட்டு வாங்கண்ணின்னு ஊருல இருந்தே டாட்டா காட்டிடுச்சு! எனக்கும் தோசை போதும்க்கா!" என்று சொல்லி முறுவலித்தாள் குணாளினி.

ஜனார்த்தனனுக்கு சஞ்சீவ் செய்து கொண்டிருக்கும் வேலைகளைப் பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது. பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக அவனும் மூன்று நான்கு முறை அலுவலகத்திற்கு அலைந்தான் தான்.... ஆனால் அங்கு செல்வது மட்டுமே தான் ஜனாவின் வேலையாக இருக்கும். அதற்குள் சஞ்சீவ் ஏற்பாடு செய்திருந்த ஒருவர் ஜனாவிடம் தன்னை அறிமுகம் செய்திருப்பார்.

"ஏன் சஞ்சீவ்....! பொள்ளாச்சியில இருந்துட்டு சென்னையில எப்டிப்பா இவ்ளோ வேலையவும் முடிச்ச?" என்று அவனிடம் சற்று வியந்து கேட்ட ஜனார்த்தனனிடம்,

"காண்டாக்ட்ஸ் தான் ஸார்! பொள்ளாச்சியில இருந்துட்டு அடுத்த கண்டம் வரைக்கும் பிஸினஸ டெவலப் பண்ண நினைச்சு வச்சிருக்கோம்! இங்க இருக்குற சென்னையில வேலையப் பாக்க முடியாதா?" என்று பணிவுடன் கேட்ட சஞ்சீவின் இயல்பை மனதிற்குள் ரசித்தான் ஜனார்த்தனன்.

நான் செய்யும் வேலையை நான் நேசித்து உளமார செய்கிறேன் என்பது வேறு; நான் செய்யும் வேலையை என்னை விட வேறு எவனாலும் சிறப்பாக செய்து விட முடியாது என்பது வேறு! எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சஞ்சீவ் எப்போதும் என்னுடைய வேலையை நான் நேசித்து செய்கிறேன் என்பதற்கு மேல் ஒரு வார்த்தை கூட தலைக்கனத்துடன் பேசியதில்லை! சஞ்சீவின் இந்த குணம் ஜனாவை மிகவும் ஈர்த்தது.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now