❤ சிறுநகை 93

242 22 2
                                    

கதிர் சென்னைக்கு வருவதற்கு முன்பு சஞ்சீவ் சனிக்கிழமை மாலையே அங்கு வந்து விட்டான். வீட்டிற்குள் வந்த கால்மணி நேரத்தில் இருந்தே
ஜனார்த்தனனிடம் தான் செய்த அனைத்து ஏற்பாடுகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

"சஞ்சீவ் அங்கிள்!" என்று அவனைப் பார்த்ததும் தன்னுடைய கால்களை கட்டிக் கொண்ட இரண்டு பூக்களிடம் புன்னகைத்தவன்,

"இந்தோ வந்துட்டேன் செல்லம்ஸ்! அப்பாட்ட ஒரு வொர்க் இருக்கு! முடிச்சுட்டு உங்க கிட்ட வர்றேன்!" என்று சொல்லி விட்டு தொடர்ந்து பேசினான்.

"ம்ப்ச்! வந்தவொடனே வேலையப் பத்தி பேச ஆரம்பிச்சாச்சா? வேலையப் பத்தி பேசிக்கிட்டு இருந்தா உங்களுக்கு எல்லாம் டயர்டே ஆகாதா? சாப்ட்டு சாவகாசமா எல்லாத்தையும் பேசுங்க. சஞ்சீவ் நைட்டுக்கு என்ன சாப்டுற?" என்று கேட்ட கல்பனாவிடம்,

"ஒரு ப்ளைன் ஊத்தப்பம்; ஒரு கேரட் ஊத்தப்பம்; ஒரு ஆனியன் ஊத்தப்பம் கல்பனா சிஸ்டர்! முடிஞ்சா கொஞ்சூண்டு பொடியும் எண்ணெயும்!" என்று சொன்னான்.

"டேய் ஒத வாங்குவ.... எங்க வெண்ணு கூட ரெண்டு தோச சாப்டுவா. நீ என்ன மூணு தோச போதுங்குற? அது எப்டி போதும்? சைட் டிஷ்ஷா சாம்பார், சிக்கன் கிரேவி எல்லாம் இருக்கு. கொறஞ்சது ஆறு தோசை சாப்டலாம். சனிக்கிழம ஆஞ்சநேயர் விரதம்னு எல்லாம்
இனிமேல் சொல்லக்கூடாது. கல்யாணம் ஆகிடுச்சு; இன்னும் இப்டி குருவி மாதிரி கொத்தி கொத்தி சாப்ட்டுட்டு இருந்தா என்ன பண்றது? நல்லா சாப்ட்டு இன்னும் கொஞ்சம் பூசுனாப்ல ஆகுடா தம்பி!" என்று சொன்ன கல்பனாவிடம் புன்னகைத்த படி தலையாட்டினான் சஞ்சீவ்.

"இதுதான்.... இதைத்தான்..... இப்படி உன் மீது அனைவரும் உரிமை எடுத்துக் கொள்வதை மறுத்து இத்தனை நாளாய் இந்த சுகத்தை தொலைத்திருந்தாய் உனக்குப் புரிகிறதா?" என்பது போல சிரிப்புடன் புருவத்தை நெளித்தபடி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் குணாளினி.

"குணாளினி..... நீ என்ன நல்லா சப்பணம் போட்டு ஒக்காந்துக்கிட்டு என்னைய லுக் விட்டுட்டு இருக்க? நான் தோசை கேட்டேன். உன் காதுல விழல? போயி கல்பனா அக்காவுக்கு வெங்காயம் கட் பண்ணு போ!" என்று விரட்டியவனை முறைத்து உதட்டை சுழித்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள் குணாளினி.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now