❤ சிறுநகை 92

Start from the beginning
                                    

"அப்டியே இங்கருந்தேவா கிளம்பப் போற? வீட்டுக்குள்ள வா. மூணு நாள் ஊருக்குப் போறேன்னு சொல்ற! போட்டுக்க சட்டை, பேண்ட், கொண்டு போக பேக் ஒண்ணுமே எடுத்து வைக்கலயே? நான் வேணும்னா உனக்கு லக்கேஜ் பேக் பண்ணி தரட்டுமா? ரூம்ல வந்து பத்து நிமிஷம் வெயிட் பண்ணு! நான் எல்லாத்தையும் எடுத்து வச்சுடுறேன்!" என்றாள் மெல்லிய குரலில்.

"ஸாரி டிம்பிள்! எனக்கு லக்கேஜ் எல்லாம் பேக் பண்ற பழக்கமே இல்ல! ஏதாவது ஊருக்கு கிளம்புனா அங்க போய் தான் ட்ரெஸ் எல்லாம் வாங்கிப்பேன்!" என்று அவளிடம் சொன்னான் சஞ்சீவ்.

"ஏன் அப்டி? வீட்டுக்குள்ள நிறைய ட்ரெஸ்ஸஸ் இருக்கு! வச்சு எடுத்துட்டுப் போக சூட்கேஸூம் இருக்கு! அந்த சூட்கேஸ கார்ல தூக்கி வைக்க ஆளுங்களும் இருக்காங்க..... பிறகு எதுக்கு ஊர்ல போயி ட்ரெஸ் வாங்கிட்டு? எங்கூட வா. ரூம்ல வந்து அஞ்சு நிமிஷம் உக்காரு!" என்று சொன்னவள் அவனை தங்களுடைய அறைக்கு அழைத்துச் சென்று அதற்கு பிறகு
பத்து நிமிடங்களுக்குள் அவனுடைய பெட்டியைக் கட்டி இருந்தாள்.

"தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்! இப்ப கிளம்பட்டுமா?" என்று அவளிடம் கேட்டு புன்னகைத்தான் சஞ்சீவ்.

"இரேன்..... அதுக்குள்ள கிளம்பவா கிளம்பவான்னுட்டு? கம்பெனியில என்ன டின்னர் இன்னிக்கு? நீ என்ன சாப்டேன்னு சொல்லவேயில்லயே?" என்று கேட்டாள் குணாளினி.

"டின்னர என்னைக்குடீ நான் கம்பெனியில சாப்ட்டேன்? வொர்க் முடிச்சு வரவே லேட் ஆகிடுச்சு.... ஸோ போற வழியில ஏதாவது பாத்துக்கலாம்னு தான் நான் சாப்பாடு பத்தி ஒண்ணும் பேசல!" என்று சொன்னான்.

"நீ சாப்டியான்னு உங்கிட்ட கேட்டேனே? நான் சாப்டேனான்னு எங்கிட்ட கேட்டியா நீ?" என்று குற்றம் சாட்டும் குரலில் சொன்ன குணாளினியிடம்,

"ஓ... அப்ப நீ இன்னும் சாப்டலையா? நான் ஊருக்கு கிளம்புனதுக்கு அப்புறம் போய் சாப்ட்டுட்டு வந்து படு!" என்றவனின் சட்டையை மறுபடியும் பின்புறத்தில் இருந்து இழுத்துப் பிடித்தாள் அவனவள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now