❤ சிறுநகை 91

269 25 4
                                    

பத்து, பதினைந்து பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்த வாடிக்கையாளர் பாகேஸ்வரியிடம் மறுபடியும் ஒருமுறை சொன்ன விஷயத்தையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

அடுத்த செக்ஷன் பணியாளர்கள் வைரமுத்துவுக்கு துணை சேர்ந்து அவனுடன் நின்று கொண்டிருக்க அவர்கள் இருவரிடமும் புன்னகைத்த பாகேஸ்வரி,

"உங்க ரெண்டு பேருக்கும் உங்க செக்ஷன்ல வேலை எதுவும் இல்லையா? எவ்ளோ கஸ்டமர்ஸ் அப்படியே நிக்குறாங்கன்னு பாருங்க. யார் யாருக்கு என்னென்ன வேணும்னு கேட்டு எடுத்துக் காட்டுங்க..... போங்க!" என்று கண்ணசைக்க அவர்கள் பாகேஸ்வரியிடம் தலையசைத்து விட்டு கூட்டத்தில் இருந்தவர்களை கலைத்து ஒவ்வொரு செக்ஷனுக்கும் அனுப்பி வைத்தனர்.

எரிச்சலடைந்த அந்த ஒற்றை வாடிக்கையாளருக்கு ஒரு இருக்கையை வரவழைத்த பாகேஸ்வரி அவரை அதில் அமர வைத்து அவரிடம் நின்று கொண்டு பேசினார்.

"ஸார்.... உங்க பிரச்சன எனக்குப் புரியுது.... தரம் நல்லா இருந்தா அதுக்கேத்த மாதிரி வெலையும் அதிகமா தான் இருக்கும். எங்க கடைக்கு வர்றவங்கள தரங்கொறைஞ்ச துணியக் குடுத்து நாங்க ஏமாத்த விரும்பல. உங்களுக்கு வேணும்னா நீங்க உங்க குழந்தைக்கு இந்த மாதிரியான உடுப்ப வாங்கிக் குடுக்கலாம்; இல்ல தாராளமா இன்னும் ரெண்டு கடையில ஏறி எறங்கி அவங்களோட பொருள், விலை இதையெல்லாம் பார்த்துட்டு வாங்கலாம். இதுக்கு மேல உங்க இஷ்டம்!" என்று குரலை உயர்த்தாமல் தெளிவாக புன்னகைத்த படியே பேசியவர் அந்த நபரிடம் கைகூப்பி விட்டு முத்துவிடம் சென்றார்.

"நாங்க என்ன உங்களுக்கு இலவசமாவா துணிய குடுத்துட்டு இருக்க முடியும்னு கேக்குறீங்க? அவங்க இலவசமா கேட்டாங்களா உங்க கிட்ட? ஆசைப்பட்டது கொஞ்சம் முன்னப்பின்ன விலையில இருந்தா, அது வாங்குறதுக்கு கொஞ்சம் யோசனையா தான் இருக்கும்! அதப் புரிஞ்சுக்காம இது என்ன பேச்சு? இப்டியெல்லாம் இனிமே பேசாதீங்க முத்து!" என்று சற்று இறுகிய குரலில் சொன்ன பாகேஸ்வரியின் கண்டிப்பைப் பார்த்து மகிழ்ந்த வாடிக்கையாளர்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now