❤ சிறுநகை 90

Start from the beginning
                                    

"ஆமாம்மா..... காலையில நினைச்ச காரியம் ஒண்ணு சரியா நடந்துடுச்சு! அதுனால சந்தோஷமா இருக்கேன்!" என்றான்.

"என்னய்யா..... பாப்பாவ கூட்டிக்கிட்டு பத்து நாளைக்கு ஏதாச்சு ஊருக்குப் போயிட்டு வருவன்னு பாத்தா காரியம் சரியா நடந்துடுச்சு; அதுனால சந்தோசமா இருக்கேங்குறியே கண்ணு! ஒன்னைய என்னா சொல்றது?" என்று கேட்டவரிடம்,

"ஒண்ணும் சொல்ல வேண்டாம்! இப்ப நானோ அவளோ உங்கள விட்டுட்டு எங்கயும் நகருற மாதிரியில்ல.... உங்க மருமக கல்யாணத்தன்னிக்கே உங்க கஷ்டத்துல நானும் பங்கெடுத்துக்குறேன்னு சொல்லாம சொல்ல என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியுந்தான? அப்புறம் எதுக்கு இந்த கேள்வியெல்லாம்.....? நாங்க சந்தோஷமா இருக்கோம் ஆனா வெளியூருக்குப் போய் ஊரு சுத்துற அளவுக்கு சந்தோஷமா இல்லம்மா! அவளோட அம்மா வீட்டுக்கு நைட் போயிட்டு காலையில வர்றதுக்குள்ள பத்து தடவ என்னைய பாகேஸ் ஆன்ட்டி தேடுவாங்கன்னு சொல்லிடுறா; இவ எங்க உங்கள தனியா விட்டுட்டு ஊருக்கு வர்றது? நிஜமாவே நாங்க இல்லாம உங்களுக்கு ராத்திரியில ஒண்ணும் கஷ்டமா இல்லையேம்மா?" என்று விளக்கமும் அளித்து விட்டு இத்தனை கேள்விகளையும்
கேட்டான் கதிர்.

"ஒரு கூடு அத விட்டு இன்னொரு கூடுன்னு இருந்தவய்யா நானு..... இப்பத்தான் எங்கூட்ட விட்டு கொஞ்சம் வெளியவே எட்டிப் பாக்குறேன். இந்தக் காலத்து பொம்பளப் புள்ளைங்கள எல்லாம் நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க வெளிய வர்றாங்க; தைரியமா சொந்த கால்ல நிக்குறாங்க; இந்த சமுகத்த ஒத்தையாளா சந்திக்குறாங்க..... இந்த மாதிரியெல்லாம் உங்கம்மாவும் கொஞ்சமாவது வளர வேண்டாமாய்யா? இதுல எங்கிட்ட நீயி தனியா வீட்டுக்குள்ள பூட்டிக்கிட்டு தூங்குறதுக்கு பயமாயிருக்கான்னு கேக்குற? என்ன சாமி இது?" என்று சொன்ன அன்னையிடம் புன்னகைத்தவன்,

"சரிம்மா.... இனிமே இந்த கேள்விய உங்க கிட்ட நான் கேக்கல!" என்றான்.

மகனுடன் பத்து நிமிடங்களில் கடையை அடைந்த பாகேஸ்வரி தங்களுடைய பணியாளர்கள்
அனைவரின் காலை வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டபடியே கதிருடைய கையில் கடைச்சாவியைக் கொடுத்து கடையை திறக்கச் சொன்னார்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now