❤ சிறுநகை 90

Start from the beginning
                                    

"ஏய் சந்து.... எதுக்குடீ சிரிக்குற?" என்று கேட்ட சுமலதாவிடம்,

"கதிர் ஆலென ரோடு ரோடா நடக்க வைக்கப் போறான்மா! நீயும் அந்த பாதயாத்திரையில கலந்துக்கப் போறியா?" என்று கேட்டாள்.

"சந்து என்ன மாப்ள சொல்றா?" என்று கேட்ட ஆலெனிடம் சற்றே தயங்கிய குரலில்,

"இல்ல மாமா! அவங்களோட
சின்ன தேவைக்காக ரோட்டுல வரையுற கலைஞர்கள்ல ஆர்வம் இருக்குற சில பேரை
நம்ம ட்ராயிங்க் இன்ஸ்டிடியூட்ல சேர்த்து அவங்களுக்கும் அடிப்படையில இருந்து சில விஷயத்த சொல்லித் தரலாம்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்குது! நூறு பேர் காசு குடுத்து கத்துக்குறத பத்து பேர் இலவசமா கத்துக்கட்டுமே.... இந்த கலைஞர்கள் எங்க எங்க இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் எடுத்துட்டு வந்தீங்கன்னா, நான் அவங்க கிட்ட நம்ம ஸ்கூல பத்தி பேசி புரிய வைப்பேன்.
இத உங்களால செய்ய முடியுமா? இந்த ஐடியாவப் பத்தி நீங்க
என்ன சொல்றீங்க மாமா?" என்று கேட்டான் கதிரேசன்.

"நல்ல விஷயம் தான் நல்லா செய்யலாம் மாப்ள!" என்று சொன்னவரிடம்,

"ஆலென் இதுக்கு நான் வரல.... நீ மட்டும் போயிட்டு வா! ரோட்டுல வரையுறவங்க கூட எல்லாம் பேச நம்மளால முடியாதுப்பா!" என்று சொன்ன சுமலதாவின் இயல்பை அங்கு யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரால் கண்டிப்பாக அந்த காரியத்தை செய்ய முடியாது என்று வீட்டினர் அனைவருக்கும் தெரியும்.

"அத்தை.... நீங்க ட்ராயிங்க் ஸ்கூலோட அட்மினிஸ்ட்ரேஷன மட்டும் பாத்துக்கோங்க. மாமாவும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. மாசாமாசம் ஸ்ட்டூடெண்ட்ஸ் கிட்ட மறக்காம ஃபீஸ வாங்கிடுவீங்களா? இல்ல.... நம்ம தாராள மனசோட யாருக்குமே ஃபீஸ் வாங்காம க்ளாஸஸ் நடத்துவோமா அத்தை?" என்று கேட்ட கதிரிடம்,

"ஐயோ மாப்ள.... ஃப்ரீயா கிடைக்குதுன்னா, அந்த விஷயத்துக்கு வேல்யூவே இருக்காது! அந்த ஸ்கூலோட பில்டிங் கட்ட, சொல்லித்தர்ற பொருளெல்லாம் வாங்க நீங்க காச செலவழிப்பீங்க தான? அந்த பணத்த நமக்கு யார் தருவாங்க? அதெல்லாம் ஒவ்வொரு ஸ்ட்டூடெண்டுக்கும் ஃபீஸ் கண்டிப்பா வாங்கணும்!" என்று சொன்ன சுமலதாவிடம் பெரிதாக தலையாட்டினான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now