❤ சிறுநகை 90

309 25 4
                                    

மறுநாள் காலையில் வாக்கிங் முடிந்து வந்த ஆலெனிடம் "மாமா.... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று கதிர் சொல்ல ஆலென் தன்னுடைய மருமகனைப் பார்த்து புன்னகைத்த படி,

"சொல்லுங்க மாப்ள.... என்ன பேசணும்?" என்று கேட்டார். இவன் தன் அப்பாவிடம் மனதில் உள்ளதை தயங்காமல் பேசி விடுவானா? எப்படி விஷயத்தைப் பேசப் போகிறானாயிருக்கும்? என்ற ஆர்வத்தில் சந்தனாவும் அங்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

திருமணம் முடிந்த பிறகும் ஆலெனை ஸார் என்றும் சுமலதாவை அம்மா என்றும் அழைத்துக் கொண்டிருந்தவன், தன் மனைவியின் அன்புக்கட்டளையால் ஆலெனையும் சுமலதாவையும்  சிரமப்பட்டு முயன்று மாமா அத்தை என்று அழைக்கப் பழகியிருந்தான்.

தன்னுடைய மகளும் மருமகனும் கணவரின் முன் அமர்ந்திருந்தப்பதைப் பார்த்த சுமலதாவும் ஆலெனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"தண்ணி அது
ரொம்ப குளிருதே
ஷவரு அது
தலையில் இடிக்குதே
சோப்பு அது
கையில் வழுக்குதே
பல்லி அது
சொவத்தில் நிக்குதே!"

என்று தன்னுடைய சொந்த ட்யூனில் சொந்த வரிகளைப் பாடிக் கொண்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தான் ஜெபா.

"மாமா..... செஞ்சுட்டு இருந்த வேலைய விட்டுட்டு நம்ம ஆரம்பிக்கப் போற ட்ராயிங்க் ஸ்கூல பாத்துக்குறேன்னு சொன்னது நீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா! நான் என் சைடுல அந்த ஸ்கூலுக்கு பிள்ளைங்க வர்றதுக்கான வேலைங்கள செஞ்சுட்டு இருக்கேன்! சஞ்சீவ் அவன் சைடுல இடத்துக்கான ரெஜிஸ்ட்ரேஷன், கட்டடத்த கட்டுறதுன்ற வேலையப் பாத்துட்டு இருக்கான். உங்களால முடிஞ்ச வேலையா நீங்க எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனுமே மாமா?" என்று ஆலெனிடம் விண்ணப்பித்தான்.

"உங்களுக்கு என்ன மாப்ள உதவி வேணும்? சொல்லுங்க அதெல்லாம் ஆலென் கண்டிப்பா செய்வாரு. என்னால முடிஞ்சா நானும் செய்றேன்!" என்று கதிரிடம் சொன்ன சுமலதாவின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனா லேசாக சிரித்தாள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now