❤ சிறுநகை 87

259 27 3
                                    

அன்று காலை ஒன்பதரை மணியளவில் சந்தனாவுடைய ஸ்கூட்டியை ஓட்டியபடி தன்னுடைய வொர்க்ஸ்பாட்டிற்குள் நுழையப் போனவனுக்கு "ப்ளூமிங் லைஃபின்" பெரிய கதவுகள் இரண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.

"நமச்சு அண்ணா; நமச்சு அண்ணா!" என்று செக்யூரிட்டியை சப்தமாக அழைத்தவன்,

"காலையிலயே மெயின்கேட்ட பூட்டிட்டு எங்க ரவுண்ட்ஸ் அடிக்கப் போய்ட்டாரு இவரு? ஒருவேள மார்னிங் தம்முக்கு கண்டா ஒதுங்கிட்டாரோ...? பட் அதுக்கு கூட இன்னும் டைம் இருக்கே?" என்று நினைத்தபடி அந்த இல்லத்தின் உரிமையாளர் பிரகாஷிற்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

"சொல்லுப்பா ஜெபா....!" என்று கேட்டவரிடம்,

"அங்கிள்.... நம்ம செக்யூரிட்டி நமச்சிவாயம் அண்ணாவ காணும்! மெயின் கேட்டை பூட்டிட்டு எங்க போயிட்டாருன்னு தெரியல; எதுவும் ப்ராப்ளமா அங்கிள்?" என்று கேட்டவனிடம்,

"நான் நம்ம ஹோமுக்கு தான்ப்பா வந்துட்டு இருக்கேன். நீ ஒரு ஃபைவ் மினிட்ஸ் அங்க வெயிட் பண்ணு!" என்று சொல்லி விட்டு வைத்தார் ப்ரகாஷ்.

ஆலெனுடைய அலுவலக சீனியர்களில் இந்த மனிதரும் ஒருவர்! இந்த இடத்தில் அவனால் முழு ஈடுபாட்டோடு ஒன்றி இருக்க முடிகிறது என்றால் இந்த வேலையில் ப்ரகாஷ் அவனுக்கு குடுத்த சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்!

"எட்டு மணி பத்து நிமிடத்திற்குள் உன் ஸீட்டில் இருக்கவில்லை என்றால்...." என்று ஒருநாளும் ப்ரகாஷ் ஜெபாவிற்கு நேர விதிமுறைகள் விதித்ததே இல்லை.
சொல்லப்போனால் காலையில்
எட்டரை மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தவனிடம்,

"இவ்ளோ சீக்கிரத்துல இங்க வந்து நீ என்ன பண்ணப்போற? கொஞ்சம் லேட்டா தான் வாயேன்!" என்று சொல்லி இன்னும் கொஞ்சம் அவனை சோம்பேறி ஆக்கி விட்டதே அவர் தான்!

தன்னுடைய மனைவியினுடைய உடல்நலக்குறைவு காரணமாக அவர்களை இழந்து விட்டவருக்கு வாழ்க்கையில் அடுத்து இயங்குவதற்கான பிடிப்பு என்ன என்ற கேள்வி வர, அவருடைய மகன் சம்பாதித்து அனுப்பியிருந்த பணத்தில் அவருக்கான முதுமை கால இன்வெஸ்ட்மெண்டாக இருக்கட்டும் என்று நினைத்து வாங்கிப் போட்டிருந்த இடத்தில் "ப்ளூமிங் லைஃப்" என்ற முதியோர் இல்லத்தை தொடங்கி விட்டார்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now