❤ சிறுநகை 86

343 31 5
                                    

அறைக்குள் நுழைந்த குணாளினி தன்னுடைய தந்தையை அழைத்து அன்றைய தினத்துக்கான வேலைகளை அவரிடம் சொல்லி விட்டு ரெடியான ஆர்டர்களை கஸ்டமர் வசம் ஒப்படைத்து விட்டு, பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாள்.

"ஏங்கண்ணு..... இன்னிக்கு ஒனக்கு வேற சோலி ஏதாவது வந்துடுச்சாக்கும்?" என்று கேட்டவரிடம், 

"ஆமாங்கப்பா! பொன்னுரங்கத் தாத்தா அவிய்ங்க அம்பத்திரண்டு வருசத்துக்கு முன்னால வெறும் ஓட்டுசாப்புல வச்சு எளநிய விக்க
ஆரம்பிச்ச அவரோட வியாபாரம் இன்னிக்கு எங்க வளந்து நிக்குது பாருங்கப்பா...... குணாக்கண்ணு குணாக்கண்ணு ஆசையா கூப்டுவாப்ல மனுசன்! இந்த விழாவுல கலந்துக்குற வரைக்கும் உயிரோட இருப்பனான்னு தெரியலன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்தாரு! சொன்னாப்லயே கிளம்பி போவவும் செஞ்சுட்டாரு..... இந்த நிகழ்ச்சி இருக்குறதுங்காட்டியும் தானுங்கப்பா இன்னிக்கு கடைக்கு வர முடியல.....!" என்று சொன்ன தன்னுடைய பெண்ணிடம்,

"சரிம்மா! நான் வடிவும் இன்னிக்கு எல்லாத்தையும் கவனிச்சிக்கிடுறோம்! நீ முடிஞ்சா ராத்திரி சாப்பாட்டுக்கு மாப்ளய கூட்டிக்கிட்டு நம்ப வீட்டுக்கு  வந்துட்டுப் போம்மா!" என்றவரிடம்,

"யப்போவ்.... ராத்திரிக்கு நீங்க இங்க வாங்கப்பா!" என்று சொல்லி விட்டு போனை வைத்தாள் குணாளினி.

அவளது உரையாடலுக்கு இடைஞ்சல் வராமல் தன்னுடைய லேப்டாப்பில் ஏதோ தகவலைப் பார்த்துக கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்துவிட்டு,

"நீ இன்னும் குளிக்கப் போகலையா? மணி எட்டரை ஆச்சுடா!" என்று சொன்னவளிடம்,

"உங்கிட்ட பேசணும் குணாளினி! இங்க வா!" என்றான் அவளுடைய கணவன்.

"போச்சுடா குணாப்புள்ள.... இந்தப்பய நம்ம கிட்ட பேசணுமாமே? அப்ப ஸீனு இன்னும் முடியலயா?" என்று நினைத்துக் கொண்டு அவனருகில் வந்து பவ்யமாக கட்டிலில் அமர்ந்தவள்,

"இன்னிக்கு நீ போட்டுக்க க்ரீம் கலர் சட்டை எடுத்து வைக்கவா? இல்ல வெள்ள கலரா சஞ்சீவ்?" என்று கேட்டாள்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now