❤ சிறுநகை 83

Depuis le début
                                    

இம்சை அரசன் படத்தின் ஒரு சீனை நடித்துக் காட்டப் போகிறோம் என்று சொல்லி குணாளினி, மினு, ஜெபா இவர்கள் மூன்று பேரும் என்னென்ன அலப்பறைகள் செய்கிறார்கள் என்று ஆடியன்ஸாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் கைதட்டினர்.

ஆலென் இரவு உணவுக்கு கல்பனா மற்றும் குணாளினிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து விட்டு தன்னுடைய  நண்பர்கள் மகளுக்காக அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திகளை அலைபேசியில் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு இசையரசனைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

"மூணும் அப்டியே படத்துல வர்ற காரெக்டர் மாதிரியே சூப்பரா நடிக்குதுங்க இல்லப்பா?" என்று கேட்டு டீவிக்கு கொஞ்சமாக தள்ளி கல்பனாவும், மாணிக்கவேலும், ஜனாவும் தரையில் மெத்தை விரித்து அமர்ந்திருந்தனர். கல்பனா ஹாலில் அமர்ந்து இளமதியை தன்னுடைய மடியில் போட்டு தட்டி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

"கல்பனாக்கா! நாங்க நைட் கொஞ்ச நேரம் முழிச்சு இருக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். இன்னும் நிறைய சீன்ஸ் எல்லாம் ரீக்ரியேட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம். நீங்களும் அப்ப வர்றீங்களா?" என்று கல்பனாவிடம்
கேட்டாள் குணாளினி.

"இல்லம்மா.... நாளைக்கு காலையில ஊருக்கு கிளம்பணும்ல? இப்பப் போயி கொஞ்சம் தூங்குனா தான் நாளைக்கு ட்ராவல் ஈஸியா இருக்கும்! சிறுசுங்க நீங்க எல்லாரும் ஜாலியா
என்ஜாய் பண்ணுங்க!" என்று குணாளினியிடம் சொன்னாள் கல்பனா.

"ஒழுங்கா படுத்து தூங்காம, என்னத்த என்ஜாய்.... பண்ண வேண்டியதிருக்கு? ஏய் கல்பனா சிஸ்டர் சொல்றது காதுல விழுதுல்ல உங்களுக்கு? நாளைக்கு காலையில நாமளும் கூட தான் ட்ராவல் பண்ணனும். அதுனால சீக்கிரத்துல படுக்குற வழியப் பாருங்க புரியுதா? டேய்எல்லாம் ஒழுங்கா தான போயிட்டு இருந்தது? ஏன்டா பாதியில நிப்பாட்டுன?" என்று சொல்லி அவனுடைய பின்னால் வந்து நின்றான் சஞ்சீவ்

"தம்புடு.... பேச்சு பேச்சாத் தான் இருக்கணும்! ஆனா டயலாக் மறந்து போயிடுச்சே? நான் என்ன பண்ணுவேன்? ம்ஹூம்.... எதுக்கும் நீங்க கொஞ்சம் முன்னால வந்துடுங்க.... என்ன நீங்க பாட்டுல என்னைய மரியாத இல்லாம வாடா, போடாங்குறீங்க? நான் உங்கள விட ஒரு வயசு பெரியவன் தெரியும்ல? இம்புட்டூண்டு பொடுசு வந்த ரெண்டு நாளைக்குள்ள அழகா என்னைய அண்ணான்னு கூப்ட படிச்சுடுச்சு! உங்களுக்கு இன்னும் அந்த மரியாத தெரிய மாட்டேங்குதே?" என்று கேட்டு உச்சுக்கொட்டியவனிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Où les histoires vivent. Découvrez maintenant