❤ சிறுநகை 83

309 29 8
                                    

"மன்னா.....!"

"என்னா....!"

"தங்களை காண புலவர் மாப்புக்குச்சி மண்டையன் வந்திருக்கிறார்!"

"என்ன.... மாப்புக்குச்சி மண்டையனா? அந்தக்குச்சியை ஒடிந்து விடாமல் பத்திரமாக அழைத்து வரச்சொல்லும்!" என்று சொன்ன இம்சி இசையரசன் தன்னுடைய வரைந்து விடப்பட்ட
மீசையை சற்றே முறுக்கிக் கொண்டான்.

"வணக்கம் மாமன்னா....!" என்று கைகுவித்த ஜெபாவிடம்,

"யோவ் புலவரே.... யாரய்யா உனது மாமன்? நான் இசையரசன்! உனது மாமன் அல்லன்; சரி நீர் வந்த நோக்கம்....?" என்று கேட்ட குணாளினியிடம்,

"சும்மா அப்டியே ஒரு அரண்மனை விஸிட் அடிச்சுட்டு போகலாம் என்று வந்தேன் மன்னா! ங்கொய்யால ராஜ வாழ்க்கைய நீங்க மட்டுந்தான் வாழணுமா? எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் அது எட்டாக்கனி தானா?" என்று திமிராக கேட்டான் ஜெபா.

"ஏய்... மாப்புக்குச்சி! மன்னர் இப்போது தானய்யா உன்னை ஒடிந்து விடாமல் பத்திரமாக அழைத்து வரச்சொல்லும் என்று திருவாய் மொழிந்தார்! அதற்குள் இப்படி விதண்டாவாதம் பேசி உனக்கு நீயே சூனியம் வைத்துக் கொள்கிறாயே..... வாயை மூடித் தொலையும்!" என்று பதறினாள் மதியூகி மினு.

"அமைச்சரே.... இந்த புலவன்  கொய்யால என்று ஏதோ ஒரு பாஷையில் என்னைப் பார்த்து ஏதோ சொன்னானே? என்ன அது?" என்று இசையரசன் கேட்க,

"அது வேற ஒன்றுமில்லை மன்னா! யாராலும் கொய்ய முடியாத இடத்தில் இருக்கும் ஆள் நீர் என்பதை சொன்னார்! அது ஒரு பெரிய வாழ்த்து மன்னா!" என்ற மதியூகிடம்,

"ஓ.... இந்த புலவனின் வாழ்த்தில் யாம் மிகவும் மகிழ்ந்தோம்
யாரங்கே! இந்த மாப்புக் குச்சி மண்டையனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு வழங்குங்கள்!"
என்று சொன்ன இசையரசனிடம்,

"போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்!" என்று சொன்ன புலவன் நம்முடைய ஜெபசேகரன் அதற்கு மேல் தன் கதாபாத்திரத்தில் நடிக்காமல் சொதப்பி விட அந்த சீன் அப்படியே முடிந்தது.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now