❤ சிறுநகை 82

304 26 8
                                    

"வெல்கம் ஹோம் பாஸ்!" என்ற வரவேற்புடன் தன் கையிலிருந்த தட்டில் ஐந்தாறு கண்ணாடி டம்ளரை வைத்து, தண்ணீர் நிரப்பி அதில் கலர் கலரான ஜெல்லி பால்களை போட்டு கொண்டு வந்தவனின் கையில் இருந்த தண்ணீரை எட்டிப் பார்த்த கதிர் சஞ்சீவிடம்,

"என்னதுடா இது....? மத்த எல்லாரும் எங்க காணும்? எனக்கு நீ கரெக்டா தேவைப்படுற நேரம் பாத்து பொந்துக்குள்ள போயி ஓடி ஒளிஞ்சுக்கிட்டு, இப்ப வெல்கம் சொல்லிக்கிட்டா முன்னால வந்து நிக்குற? திமிரு தான்டா உனக்கு!" என்று திட்டிய கதிரைப் பார்த்து பல்லைக் காட்டி வழிந்தவன்,

"நாந்தான் உங்கள டீல் பண்ண அம்மாவ அனுப்பி வச்சுட்டேனே? அவங்களோட நீங்க என்ன பேசிட்டு வந்தீங்களோ தெரியல! பட் சர்ச் வாசல்ல கார்ல இருந்து எறங்குனப்போ நீங்க நார்மல் ஆகிட்டீங்க! நாந்தான் இன்னிக்கு பூரா உங்க பேஸ் எக்ஸ்ப்ரெஷன மானிட்டர் பண்ணிட்டே தான இருந்தேன்; இப்ப மத்தவங்க எல்லாரும் உள்ள கொஞ்சம் பிஸியா இருக்காங்க. அதனால தான் நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்க வந்தேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க!" என்று சொல்லி விட்டு மேலாக எண்ணெய் படிந்திருந்த தண்ணீர் டம்ளருக்குள் இருந்த திரியை பற்ற வைத்தான்.

கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீர் விளக்கு ஜெல்லி பால்களுடன் சேர்ந்து அழகாக  எரிந்தது.

"வெல்கம் ஹோம் ந்யூலி மேரீட் கப்பிள்! உங்களோட மேரேஜ் லைஃப் ரொம்ப கலர்புல்லா ப்ரைட்டா ஸ்டார்ட் ஆகட்டும்! மை பெஸ்ட் விஷ்ஷஸ்!" என்று சொல்லி அவர்களுக்கு ஆரத்தி சுற்றி முடித்து விட்டு நிஜமான அக்கறையிலும், அன்பிலுமாக மணமக்களை வாழ்த்தினான் சஞ்சீவ்.

"தேங்க்ஸ்டா தம்பி! இந்த கண்ணாடி டம்ளர் விளக்கு ரொம்ப அழகாயிருக்கு!" என்று கதிர் அவனிடம் புன்னகைத்த படி சொல்ல சந்தனாவும் சஞ்சீவிற்கு நன்றி சொன்னாள்.

"உள்ள வாங்க!" என்று சொன்னவன், வராண்டாவிற்கு சென்றதும் அவர்களை அங்கேயே நிற்க சொல்ல வெண்மதி, இளமதி இருவரும் ஒரு தாம்பாளம் நிறைய ரோஜா இதழ்களை கொண்டு வந்து கதிர், சந்தனா இருவரது தலைகளிலும் தூவினர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now