❤ சிறுநகை 81

350 26 6
                                    

தங்களுடைய மாப்பிள்ளையின் வீட்டில் நடந்த பிரச்சனையை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட ஆலென், சுமலதா, ஜெபா மூவரும் இவ்வளவு நேரம் கதிருக்கு தங்களால் முடிந்த அளவு உபத்திரவம் கொடுத்து விட்டோமே என்று வருந்தினர்.

"ஆலென்.... சந்து இப்ப அத்தான் வீட்டுக்கு தான் போகணும்ங்குறா? நம்ம என்னப்பா பண்றது?" என்று ஜெபா கையைப் பிசைந்த படி தன் தந்தையிடம் கேட்க ஆலென் அவனிடம்,

"ஒரு ஆட்டோவ பிடி மோனே.... நாம நாலு பேரும் ஆட்டோவுல ஏறிக்கிட்டு, அவங்க ரெண்டு பேரையும் கார்ல வீட்டுக்கு வரச் சொல்லிடுவோம்! நாம இன்னிக்கு சந்து வீட்லயே ஸ்டே பண்ணலாம்! மாப்பிள்ளையோட அம்மாட்ட நாம எப்டியும் பேசணும் வேற!" என்று சொன்னார்.

"ஆமா ஆலென்.... பாகேஸ்வரி என்னை மாதிரி அவங்கள மட்டும் நினைக்குற காரெக்டர் இல்ல; அவங்களோட ஹஸ்பெண்ட் கொஞ்சம் மோசமானவரா இருந்தாலும், அவரை ஒரு இடத்துல  அவங்க இதுவரைக்கும் விட்டுக் குடுத்ததேயில்ல! ஸோ இந்த சிச்சுவேஷன் அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்!" என்று சற்றே வருத்தத்துடன் சொன்ன சுமலதாவிடம் எகிறிக் கொண்டு வந்தான் ஜெபசேகரன்.

"...ம்மா! பாகேஸ் ஆன்ட்டிக்கு என்ன கஷ்டம்ங்குறீங்க? அறுபது வயசுல கொஞ்சம் கூட மெச்சூர்டா யோசிக்காம, வீட்டை விட்டு ஒரு ஆளு ஓடிப்போயிருக்கான். அப்டிப் போனவன நெனச்சு அவனோட பொண்டாட்டியும், புள்ளையும் ஒப்பாரி வச்சுட்டு இருக்கணுமா? என்ன நியாயம் இது.....?"

"பொதுவா ஒரு கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய நம்பிக்கைய ரெண்டாவது தடவையா சுக்கு நூறா ஒடச்சிட்டு ஓடிப்போயிருக்கான்; அதுக்கே அவன தேடிப் பிடிச்சு செருப்பால அடிக்கணும். இதுல அவன் போயிட்டான்னு துக்கம் வேற அனுஷ்டிக்கணுமாம்..... எங்களுக்கெல்லாம் வேற வேலையில்ல?" என்று ஆவேசத்துடன் பேசியவனை அடிக்குரலில் அமைதியாக இருக்கச் சொல்லி மிரட்டினார் சுமலதா.

"ஜெபா பேசட்டும்மா.... அவனை ஏன் தடுக்குறீங்க?" என்று சுமலதாவிடம் கேட்ட கல்பனா,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now