❤ சிறுநகை 80

287 25 8
                                    

"கதிர் ஸார்.... உங்க வொய்ஃப் அழகாயிருக்காங்களா? அவங்க மேக்கப் எப்டியிருக்குதுங்க ஸார்? சிம்பிளு, சிம்பிளுன்னு சொல்லி அவங்க என்னை உருப்படியா எதையுமே பண்ண விடல ஸார்... இருந்தாலும் இந்த அளவு மேக்கப்லயே ரொம்ப அழகாயிருக்காங்க! இல்ல ஸார்?" என்று கேட்ட ஜோஸஃபினிடம் புன்னகைத்தவன்,

"பூவுக்கெல்லாம் மேக்கப் போடணும்னு அவசியமா ஜோஸஃபின்? எப்டி பூக்குதோ அப்டியே அதுங்க அழகு தான்.... அந்த மாதிரி அழகு எம்பொண்டாட்டி..... இல்லடாமா?" என்று அவளிடம் கேட்டதும் அனைவரும் சிரிக்க அவள் முகம் சிவந்து அவனுடைய கைப்பற்றிக் கொண்டு நடந்தாள்.

"ச்சே.... கடைசி வரைக்கும் இவரும் நம்ம மேக்கப்ப பத்தி ஒருவார்த்த சொல்லலையே.... ஆனா மனுஷன்  நம்ம ஓனருக்கு என்னமா ப்ராக்கெட் போடுறாருய்யா.....?" என்று முணங்கியவர் அவர்களுடைய பக்கமாக விருட்டென திரும்பி ஜெபா முறைத்த முறைப்பில், 

"ஆத்தாடி.... இவன் என்ன கண்ணாலயே தீ மாதிரி எரிக்குறான்.....!" என்று எண்ணியபடி தன்னுடைய வாயை மூடிக் கொண்டார்.

"டேய்.... என்னைய ரெஸ்ட் எடு, ரெஸ்ட் எடுன்னு கத்திட்டு நீ எல்லார் கூடயும் நல்லா ஆடிக்கிட்டு இருந்தியா? முகத்துக்கு லைட்டா ஒரு பவுண்டேஷனாவது  போட்டுட்டு வந்துருக்கலாம்ல? ஒண்ணுமேயில்லாம இப்டி அழுது வடியுற..... போட்டோ எடுக்குறதுக்கு முன்னால மரியாதயா எங்கூட வந்து கொஞ்சமா க்ரீம் போட்டுக்குற புரியுதா? ஆமா...... சளியால எப்பவும் வர்ற காது வலி வந்துடுச்சா உனக்கு? ஏன் ஒருமாதிரி டல்லா இருக்க?" என்று கேட்டு அவன் உள்ளங்கையை சுரண்டியவளிடம்,

"ம்ப்ச்! காது, கை, காலெல்லாம் நல்லாத்தான் இருக்குது! நீ கொஞ்ச நேரம் சும்மாயிருடீ!" என்று  எரிச்சலுடன் மெல்லிய குரலில் பேசினான்.

காலையில் கோவிலில் அட்சதை அரிசியை சத்தமில்லால் திருட்டுத்தனமாக கைகளில் அள்ளிக் கொண்டு அவளுடைய ப்ளவுஸூக்குள் போட்டு விட்டது, மனையில் அமர்ந்திருந்த போது அவனுடைய கால் விரலால் அவளது உள்ளங்காலில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தது போன்ற
குறும்பு வேலைகளை எல்லாம் அவன் தான் செய்து அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now