❤ சிறுநகை 79

293 25 13
                                    

"கதிர்.... நீங்க பொள்ளாச்சிக்கு வந்துருந்தப்ப என்னை ஒரு மாதிரி ஆச்சரியமான பார்வை பாத்தீங்கல்ல.....? அதே மாதிரி தான் நான் கொஞ்ச நேரம் முன்னால உங்கம்மாவ பாத்துட்டு இருந்தேன்; இந்த வாழ்க்கை நமக்கு எவ்ளோ அதிசயங்களை தருது இல்லையா மிஸ்டர் ரேஷ்.....? உங்க அம்மாவோட வில்பவர் அண்ட் கான்ஃபிடென்ஸ்க்கு முன்னால நான் எல்லாம் ஒண்ணுமேயில்ல!" என்று கதிரின் அருகில் அமர்ந்து அவனிடம் பேச்சு கொடுத்தபடியே வினோதினி தன்னுடைய காரில் அவனை சர்ச்சுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

இந்தப் பெண்மணியைப் பார்த்து தான் அதிசயத்தது போல இன்று இந்தப் பெண்மணி என்னுடைய அன்னையை பார்த்து அதிசயிக்கிறாரா என்று நினைத்து விரக்தி சிரிப்பு தான் வந்தது கதிருக்கு!

இன்று ஒரேநாளில் மட்டுமாக கணக்கிட்டால் திருமதி பாகேஸ்வரி கிருஷ்ணராஜ் இன்னொரு ஜான்சி ராணி தான்..... ஆனால் இன்றைய நிகழ்வுக்குப் பிறகு தன்னுடைய அன்னை எவ்வளவு அழப் போகிறாரோ தெரியவில்லை. சிறுவயதில் இருந்து தன்னுடைய அன்னையின் அழுகையையும், ஏக்கத்தையும் பார்த்து வளர்ந்தவன் தானே..... அந்த அழுகையும், ஏக்கமும் மறுபடி ஒருமுறை தொடரப் போகிறது என்பது தான் கதிருக்கு தாங்கிக் கொள்ள முடியாத விஷயமாக இருந்தது.

அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க, வினோதினி அவனிடம்,

"கதிர்.... கொஞ்ச நேரம் ஜாலியா ஏதாவது பேசலாமா? உங்களுக்கு சந்தனாவ எவ்ளோ பிடிக்கும்? அவங்கள வெரி பர்ஸ்ட் டைம் எங்க பாத்தீங்க? இதப்பத்தி சொல்லுங்களேன்......!" என்று கேட்டார். அவனுடன் பேசியபடியே ட்ரைவரிடம் சர்ச்சுக்கு சற்று விரைவாக செல்லும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டில் அனைவரும் கிளம்பி காரில் ஏறி விட கல்யாண மாப்பிள்ளை கதிர் மட்டும் முகம் இறுகியபடி காரில் ஏறாமல் நின்று கொண்டிருக்க சஞ்சீவிற்கு இந்த தருணத்தில் கதிரை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.

ஒன்று அவனுடைய கோபமெல்லாம் வெளிவர வேண்டும்..... இல்லை உதட்டில் புன்னகையைப் பூசிக் கொண்டு திருமணத்தில் நடித்து சமாளிக்க வேண்டும்! இந்த இரண்டு வழியில் எதை இப்போது தேர்ந்தெடுப்பது என்று யோசித்த சஞ்சீவிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now