❤ சிறுநகை 76

296 29 9
                                    

"நான் எத்தனயத் தான் உங்ககிட்ட சொன்னாலும் எம்பேச்ச நீங்க காதுலயே வாங்க மாட்டேங்குறீங்க! நீங்கன்னா நீங்க ஒருத்தர் மட்டும் எனக்கு வேண்டாமுங்க.....! ஒங்க குடும்பத்துல எல்லாரோடயும் ஒங்களால ஒண்ணுமண்ணா கலந்து பழக முடிஞ்சா தானுங்க உங்கள என்னியால கல்யாணம் பண்ணிக்க முடியும்! சின்னதுலயே நானும், அப்பாரும் மட்டுமின்னு வாழ்ந்துட்டேனுங்க! அதுனால போற எடமாவது ஆளும் பேருமா இருக்குற குடும்பமா இருந்தா தான் நல்லாயிருக்கும்.....!"

"என் குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட நான் பேசவே மாட்டேன்; நீ வேணுமின்னா அவங்களோட கட்டி உருண்டுக்கன்னு சொல்ற உங்க கூட எப்டிங்க என்னோட வருங்காலத்த பத்தி யோசிக்க முடியும்? அதுனால நீங்க இப்டியேத்தான் இருப்பீங்கன்னா தயவுசெஞ்சு என்னிய உட்டுடுங்க!" என்றாள் குணாளினி.

"என்னடீ..... எல்லார் கூடயும் சேர்ந்து இருக்கலைன்னா, என்னைய விட்டுடுன்னு சொல்லி
என்னை ப்ளாக்மெயில் பண்றியா நீ? நான் இதுவரைக்கும் தனியா இருந்தா, அதுக்குன்னு கடைசி வரைக்கும் யாருமேயில்லாம தனியா தான் இருக்கணுமோ? நான் உன்னை திரும்ப திரும்ப மிரட்டிட்டு இருக்குற மாதிரி ஒரு சூழ்நிலைய உருவாக்காத டிம்பிள்..... எப்படியும் உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது. என்னை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும். என்னைய மட்டுந்தான் லைஃப் முழுசும் காதலிக்கணும்.... அண்டர்ஸ்டாண்ட்?" என்று ஆழ்ந்த குரலில் அவளிடம் கேட்டவன் ஸோஃபாவிலிருந்து எழுந்து தன்னுடைய அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்திருந்தான்.

"அம்மா.... நான் சஞ்சீவ் பேசுறேன்! எங்க இருக்கீங்க?" என்றவன் மறுமுனையில் சப்தமே எழாததால்,

"அம்மா.... அம்மா! நான் பேசுறது கேக்குதாம்மா?" என்று இரண்டு மூன்று முறைகள் தன்னுடைய அன்னையை அழைத்து அவருக்கு தன் பேச்சு கேட்கிறதா என்று வேறு உறுதிப்படுத்திக் கொண்டான்.

"சஞ்.......சஞ்சு! நீ பேசுறது எனக்கு கேக்குதுப்பா; நான் நம்ம வீட்ல இருந்து கிளம்பி இப்ப நாகர்கோவிலுக்கு கதிரோட வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். இன்னிக்கு மார்னிங் நம்ம கம்பெனியில லேபரர்ஸ் மீட்டிங் அட்டெண்ட் பண்ண வேண்டியிருந்தது கண்ணா! அதுனால தான் என்னால காலையில நடந்த கதிர் கல்யாணத்துக்கு வர முடியல.
பட் மீட்டிங் முடிஞ்சவுடனே கிளம்பிட்டேன். மினு, குணாளினி ரெண்டு பேருக்கும் என்னோட ஷெட்யூல் தெரியுமே? அவங்க உங்கிட்ட எதுவும் சொல்லலையா கண்ணா? கல்யாணம் நல்லா நடந்ததா? கதிர் ஹாப்பி தான?" என்று தன்னிலை விளக்கம் மற்றும் வரிசையாக கேள்விகள் என கேட்டுக் கொண்டிருந்த வினோதினியின் பேச்சில் ஒரேடியாக உற்சாகம் நிரம்பி வழிந்தது.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now