❤ சிறுநகை 75

288 24 3
                                    

"அம்மா ஏன் பாஸோட மேரேஜ அட்டெண்ட் பண்ணல? அவர் தான்  பொள்ளாச்சிக்கு வந்து அவங்கள  நேர்ல பார்த்து, மேரேஜ்க்கு கண்டிப்பா வரணும்னு அம்மாவ இன்வைட் பண்ணிட்டுப் போனாரே? அப்புறமும் ஏன் அவங்க இன்னிக்கு இங்க வரல? நாங்க இந்த மேரேஜ்க்காக இன்வைட் பண்ணினவங்க எல்லாருமே கரெக்டா கல்யாணத்துக்கு வந்துருந்தாங்க. அம்மா ஒருத்தர் மட்டும் தான் இங்க வரல! ஏன் இப்டி செஞ்சாங்க?" என்று தன்னுடைய எதிர்ப்புறமாக அமர்ந்து துளைப்பது போல் பார்வை பார்த்து அவளிடம் கேட்ட சஞ்சீவிடம்,

"இப்ப நா மொதல்ல ஒங்க கேள்விக்கு பதில் சொல்லணுங்களா? இல்ல குல்ஃபிய சாப்ட்டுக்கட்டுங்களா?" என்று கேட்டாள் குணாளினி.

கையில் குல்ஃபியை வைத்துக் கொண்டு அதை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் பொறுமையற்ற பெருமூச்சுடன்,

"இத சாப்டுறதுக்கு தான இந்தக் கடை வரைக்கும் வந்துருக்க? வந்த வேலைய முடி. பட் என்னோட கேள்விக்குப் பதில் சொல்லாம ஓடிடலாம்னு நெனக்காத.
சீக்கிரமா இத ஃபினிஷ் பண்ணிட்டு எங்கேள்விக்கு பதில் சொல்லு குணாளினி!" என்றான் சஞ்சீவ்.

"ஐயயோ.... மனசுல இருக்குறத வார்த்த மாறாம கரெக்டா சொல்லுறானே? இந்த ஐச சூப்பிக்கிட்டே அவங்கிட்ட இருந்து எஸ்ஸாகிடுவோம்னு பாத்தா விடாக்கண்டன் அப்டி சூளுவா நம்மள விட மாட்டான் போலிருக்குதே குணாப்புள்ள..... சரி மொதல்ல கையில இருக்குற குல்ஃபிய முடிப்போம்! அப்புறமா இவங்கேக்குற கேள்விக்கு பதில தேடுவோம்!" என்று மனதிற்குள்ளாக நினைத்தவள் அதற்குள் குச்சியில் இருந்த ஐஸில் பாதிப் பாகம் தீர்ந்து போய் விட்டதே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.

"ஒண்ணு போதுமா? இன்னொன்னு சாப்புடுறியா?" என்று கேட்டவனிடம், 

"இன்னும் ஒண்ணுதா வாங்கித் தருவீங்களா? நா இன்னும் ரெண்டு மூணாவது சாப்டலாம்னு நெனச்சேன். ரொம்ப நல்லாயிருக்குதுல்ல ஐசு?" என்று சொன்னவளை கொலைவெறியுடன் பார்த்தபடியே அவளது விருப்பமான குல்ஃபி ஃப்ளேவர்கள் இன்னும் இரண்டை வாங்கி அவளது முன்பாக தட்டில் வைத்து விட்டு பில்லை செலுத்துவதற்காக அங்கிருந்து எழுந்து சென்றான் சஞ்சீவ்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now