❤ சிறுநகை 74

293 27 8
                                    

திருமணம் முடிந்து கதிருடைய வீட்டிற்குள் மருமகளாக அவளது கையில் குத்துவிளக்குடன்   அடியெடுத்து வைத்தாள் சந்தனா. மினுவும், கல்பனாவும், குணாளினியும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர்.

மணி பதினொன்றரை ஆனதால் அனைவருக்கும் சற்றே பசி எடுத்தது. வீட்டிற்குள் சென்றதும் முதல் வேளையாக சந்தனாவை விளக்கேற்ற அழைத்துச் சென்ற பாகேஸ்வரி, "பசிக்குதாடா பாப்பா?" என்று தன் மருமகளிடம் கேட்டு விட்டு தான் அவளை விளக்கேற்றச் சொன்னார்.

முதன்முறையாக திருமண விருந்தை நீங்கள் எங்கள் வீட்டில் தான் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று அவனிடம் சண்டை பிடித்த சுமலதாவினுடைய பேச்சைக் கேட்டு லேசாக சிரித்துக் கொண்டான் கதிர்.

தன் மனைவியினுடைய அம்மாவாக இருந்தாலும் இன்னும் அவர்களை அவனால் அம்மா என்று தான் கூப்பிட முடிந்தது.

"அம்மாவ நீ அத்தை இல்லன்னா ஆன்ட்டின்னு கூப்டுடுடா!" என்று சொன்னவளிடம் தலையை தலையை ஆட்டியவன் இன்னும் அவர்களை அத்தையென்று அழைக்கப் பழகவில்லை.

"பாஸ்..... நாம ஆர்டர் பண்ணுன சாப்பாடு வந்துடுச்சு! சாப்டலாம்!" என்று சொன்ன சஞ்சீவிடம் தலையை ஆட்டியவன் பாகேஸ்வரி, சந்தனா, கல்பனா, மினு, குணாளினி, பிள்ளைகள் இவர்கள் அனைவரையும் சாப்பிட உட்கார சொன்னான்.

"ஏய்.... என்னடா இப்ப தான் கல்யாணம் ஆகியிருக்கு; பொண்டாட்டி கூட சேர்ந்து ஒக்காந்து சாப்டாம, எங்க எல்லாரையும் முதல்ல ஒக்கார வைக்குற..... ஏன் கதிர்?" என்று அவனிடம் கேட்டாள் கல்பனா.

"கல்பனா...... எனக்கு தெரிஞ்சு ஜென்ட்ஸ் எல்லாருமே செம பசியில இருக்காங்க. அவங்க முதல்ல உக்காந்தா, சில சாப்பாட்டு ஐயிட்டம் ஃபுல்லா காலியாகிடலாம்.
அதுனால தான் கதிர் இப்டி நம்மள முதல்ல சாப்ட சொல்றான்னு நினைக்கிறேன்!" என்றாள் சந்தனா.

"இருந்தாலும் அவங்க எல்லாரும் பசியோட இருக்கும் போது நம்ம எப்டிப்பா முதல்ல சாப்டுறது?" என்று கேட்ட கல்பனாவிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now