❤ சிறுநகை 71

357 29 10
                                    

கதிருக்கும் சந்தானலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இருபத்தைந்து நாட்கள் ஆகியிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது திருமணத்திற்கு தேதி வைக்கப்பட்டிருந்தது. நிச்சயம் முடிந்த இரண்டு நாட்களில் இருந்து
திருமணத்திற்கு பத்திரிக்கை, கல்யாணம் செய்ய திருமண மண்டபம் என்று பெண்ணுடைய தந்தையாக பரபரத்த ஆலெனிடம்,

"ஸார்.... உங்களோட சைடுல பெரிய கூட்டமா உங்க உறவுக்காரங்க வர்றாங்கன்னா மண்டபத்த பேசுங்க; அப்டி யாரும் வரலையின்னா காலையில ஒரு கோவில்ல தாலி கட்டிட்டு, சாயந்தரம் சர்ச்சுல மோதிரம் மாத்தி எங்க கல்யாணத்த பண்ணிக்கலாம்!" என்று  தீர்மானமாக சொல்லி விட்டான் கதிர்.

கதிரின் தரப்பில் திருமணத்திற்கென்று பெரிதாக ஆட்கள் வரமாட்டார்கள், அதனால் தான் அவன் அவ்வளவு விட்டேற்றியாக பேசுகிறான் என்று நினைத்த ஆலென் தன் வீட்டாரிடமும், சுமலதா வீட்டாரிடமும் மிகவும் சந்தோஷத்துடன் ஒவ்வொரு உறவுக்காரரையும் தனித்தனியாக கூப்பிட்டு எங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம் என்று கிட்டத்தட்ட முழுதாக இரண்டு நாட்களை செலவழித்து அவர்களிடம் அலைபேசியில் தெரிவித்தார்.

அவர் எந்த வேகத்தில் அவர்களை தன் வீட்டு விசேஷத்திற்கு கூப்பிட்டாரோ, அதே வேகத்தில் அவர்கள் அனைவரும் நாங்கள் உங்கள் மகளுடைய திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறி தங்களது வரவை உறுதியாக மறுத்து விட்டனர்.

"என்ன ஆலென்.... ஒரு பார்மாலிட்டிக்காக கூட யாரும் பங்ஷனுக்கு வர்றோம்னு சொல்லலையே? இப்டி நம்மள ஒதுக்குனா நம்ப பையன் கல்யாணத்துக்கு நாம பொண்ண எப்டி ஆலென் தேடிக் கண்டுபிடிக்குறது?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட சுமலதாவிடம்,

"ம்க்கும்....! இங்க சந்து கல்யாணத்த முடிக்கறதுக்கே வழியக் காணுமாம்; இதுல என்னைப் பத்தி வேற யோசிச்சுட்டு இருக்கீங்க.... ஃப்ரீயா விடுங்க மாம்..... பட் டாட்..... நாந்தான் உங்க கிட்ட முதல்லயே
சொன்னேன்ல? இந்த ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் நம்ம கதிர்ணா சந்து மேல வச்சுருக்குற லவ்வ புரிஞ்சுக்குற அளவுக்கு அறிவும் கிடையாது! நம்பள அவங்கள்ல ஒரு பேமிலியா அவங்க என்னிக்குமே நெனக்கப் போறதும் கிடையாது!"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now