❤ சிறுநகை 70

362 28 8
                                    

"இது சந்துவும் சஞ்சீவும் சேந்து எடுத்த முடிவும்மா! கதிருக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நம்ம சந்துவும், பாகேஸ்வரியும் தான் எல்லா சொத்துக்கும் ஓனர்ஸா
இருக்கப்போறாங்க..... இவங்க ரெண்டு பேரும் ப்யூட்டி பார்லர், ரெடிமேட்ஸ் ரெண்டையும் கவனிச்சுட்டா ட்ராயிங்க் ஸ்கூல கவனிக்க ஒரு ஆள் வேணும்ல.... அந்த வேலைக்கு தான் நான் போகப் போறேன். அதுவும் சம்பளத்துக்கு தான்..... நம்ம ரெண்டு பேரோட பிக்ஸட் ஸேவிங்ஸ் நம்ம பிள்ளைங்களுக்கும்,
பேரன் பேத்திக்கும் தான்! மத்தபடி வீட்டோட மாச செலவ பாத்துக்க இனிமேலும் நானும், ஜெபாவும் கொண்டு வர்ற சம்பளம் தான்..... மேனேஜ் பண்ணிடலாம்ல சுமா?" என்று கேட்ட தன்னுடைய கணவரிடம் பெரிதாக தலையாட்டிய சுமலதா,

"உங்க வேலையில என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் ஹெல்ப் பண்றேன் மிஸ்டர் ஆலென்!" என்றார் புன்னகைத்த படி.

எதார்த்தத்தை புரிந்து கொண்ட அந்த தம்பதிகளுக்குள் இனி வரப்போகும் ஒரு புதிய மாறுதல் நல்ல விதமான மாறுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

"டாட் மாம்.... என்ன உங்கள தனியா
விட்டா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க! எங்க பக்கத்துல வாங்க!" என்று தன்னுடைய அன்னை, தந்தையை கையைப் பிடித்து இழுத்த சந்தனா பாகேஸ்வரி, கல்பனாவையும் அழைத்து வந்து அவர்களுக்கும் கேக் ஊட்டி விட்டாள்.

"டேய் சஞ்சீவு.... ஐ லவ் யூ டா தலைவா! ஆ சொல்லு.... கேக்கு சாப்ட வாயத் தொறடா!" என்று சொன்ன ஜெபசேகரனிடம்,

"மைண்ட் யுவர் லாங்குவேஜ் மிஸ்டர் ஜெபசேகரன்! எனக்குப் போய் நீ எதுக்குடா ஐ லவ் யூ சொல்ற முண்டம்!" என்று சொல்லி பல்லைக் கடித்தான் சஞ்சீவ்.

"நீ செய்யுற வேலையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா தண்டம்!" என்று சொன்னவன் சஞ்சீவின் வாய்க்குள் கேக்கை மெல்லமாக திணித்து அவனுக்கு ஒரு டிஷ்யூவையும் கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.

"ரேஷன்.... ப்ளீஸ்டா! நான் என்ன செய்யட்டும்? எனக்கு ரொம்ப உறுத்துது!" என்று சொன்னவளிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now