❤ சிறுநகை 69

Start from the beginning
                                    

"யேய் என்னடா ஆச்சு? நிக்க முடியாம பொத்துன்னு விழுற?
டையர்டா இருக்கா?" என்று கேட்டு அவனுடைய நெற்றியில் கை வைத்தவளிடம்,

"அறிவுகெட்டவளே.....
கொலப்பசியில இருக்கேன்டீ! மனுஷன சோறு திங்க உடுறியா ஒழுங்கா.....?" என்று களைத்த குரலில் கேட்டான்.

"ஏ சந்து.... இந்தப் பையனும் இன்னும் சாப்டலமா! கதிர்ணாவும், சஞ்சீவும் சாப்ட்டு முடிக்கட்டும்! அதுக்கப்பறம் நம்ம செலிபரேஷன்லாம் வச்சுக்கலாம்! பசிச்சா நீயும் ஏதாவது சாப்ட்டுக்க!" என்றான் ஜெபா.

"இல்ல.... இதெல்லாம் பாத்தவுடனே எனக்கு சுத்தமா பசி போயிடுச்சு! எனக்கு ஒரு ஜுஸ் மட்டும் சொல்லிடுடா ஜெபா. கதிர், சஞ்சீவ் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஸாரி..... நீங்க பொறுமையா சாப்ட்டு வாங்க! அதுக்குள்ள நாங்க எல்லாம் அரேன்ஜ் பண்ணி வைக்கிறோம்!" என்றவள் ஜெபாவிடம்,

"டேய்.... இன்னிக்கு இந்த ரெஸ்டாரெண்ட்ல ரொம்ப கூட்டம் இல்ல.... ஆனாலும் நம்ம குட்டியா பங்ஷன் மாதிரி கேக் கட்டிங்லாம் பண்றதுக்கு தனியா பெர்மிஷன் எதுவும் வாங்கணுமா?" என்று கேட்டாள்.

"அதெல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு சந்து. நம்ம ஜனா ஸார் எங்க கிட்ட ப்ளான் கேட்டுட்டு இந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜர்ட்ட பேசிட்டாங்க. ரொம்ப ஆள் வரலையின்னா இந்த ரெஸ்டாரெண்ட் பார்ட்டி ஹாலாவும் மாறிடும் போலிருக்கு! ஸோ நமக்கு ஒரு கஷ்டமும் இல்ல....
இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நாம இந்த இடத்துக்கு எந்த தொந்தரவும் குடுக்காம,
இங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். நீ உன் பேவரைட் ஜோஸஃபின இங்க வரச்சொல்லி
கூப்டலாமே?" என்று கேட்டவனிடம் கண்கள் மலர்ந்து,

"ஹே....சூப்பர் ஐடியா குடுத்தடா ஜெபா!" என்று சொல்லி விட்டு அடுத்த பத்து நிமிடங்கள் அலைபேசியில் பிஸியாக பேசிக் கொண்டிருந்தாள் சந்தனா.

இதற்கிடையில் இரண்டு பரிதாபகரமான ஜீவன்கள் எங்களுக்கு சோறு தான் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி அவர்களுடைய வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டிருந்தனர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now