❤ சிறுநகை 68

306 26 9
                                    

"டேய்.... அந்த ட்டூத்பேஸ்ட் ஷாஷே அவன் மனசுல என்ன தான்டா நினைச்சுக்கிட்டு இருக்கான்? என்னது இது? வந்தது வந்துட்டோம்; என்கேஜ்மெண்ட்ட முடிச்சுட்டுப் போறோம்ங்குற மாதிரி வெரலப் புடிச்சு இத மாட்டி உட்டுட்ட! என்னையே யோசிச்சு, எனக்காக அழகா இந்த ரிங்க்ல ஒரு ஸ்பெஷலான டிஸைன்லாம் செஞ்சுருக்க; நான் இல்லன்னு சொல்லல.... அதுக்குன்னு பொசுக்குன்னு நிச்சயதார்த்தம்னா மைண்ட் அதுக்கு ரெடியாக வேண்டாமா? ஒரு பெஸ்டிவல் மூடு வர வேண்டாமா? எல்லாம்
லூசுப்பய அவனால..... உனக்கு அஸிஸ்டெண்ட்னா அந்த லூசு உன் பெயிண்டிங்க விக்குற வேலைய மட்டும் பாக்க வேண்டியது தானடா? எதுக்கு உன்னோட பர்ஸனல் விஷயத்துல எல்லாம் தலையிடுறான்?"

"ச்சை...... லைஃப்ல எவ்ளோ முக்கியமான இவண்ட்.... அதுல ஒரு பலூன் இல்ல, ஒரு கேக் கட்டிங் இல்ல, எல்லாரையும் கூட்டி வச்சு ஒரு பங்ஷன் இல்ல; இப்டியா நம்ம என்கேஜ்மெண்ட் நடந்து முடியணும்? இது எல்லாத்துக்கும் காரணம் அவன் மட்டுந்தான்.... அவனுக்கு இருக்குது இன்னிக்கு எங்கையால ஒரு சிறப்பான சம்பவம்!" என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் சென்ற சந்தனா அங்கு எதையோ உருட்டிக் கொண்டிருக்க கதிர் ஒருவழியாக தன்னுடைய கிறக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்து அவள் பின்னால் கிச்சனுக்குள் ஓடினான்.

"அடியேய் வீம்பம்மா..... அந்தப் புள்ள ஒரு க்ரீன் கலர் மண்ணுடீ! அதுக்கு பால் புட்டியில இருக்குற பால மட்டும் தான் சப்பி சப்பிக் குடிக்க மட்டுந்தான் தெரியும்! இன்னிக்கு இப்டி லபோ லபோன்னு கத்துறவ அன்னிக்கு அவங்கிட்ட தான கதிருக்கு பிஸினஸ் தெரியலன்னு சொன்ன! உன் ஐடியாவ எல்லாம் அவங்கிட்ட சொல்லி, அத அவனத்தான செஞ்சு குடுக்க சொன்ன? அப்ப மட்டும் உங்களுக்கு எங்க அஸிஸ்டென்ட் வேணும், இப்ப மட்டும் வேணாமோ?
ரொம்ப வாயக்கூட தொறக்காத குழந்த புள்ள... அவனுக்குப் போயி சூனியம் வைக்கணும்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்குறியே? உனக்கென்ன இப்ப..... நீ பலூன் வச்சு வெளையாடணுமா? கடைக்குப் போயிட்டு அங்க உனக்கு நான் பாக்கெட் பாக்கெட்டா பலூன் வாங்கித் தாரேன்...... இல்ல இல்ல பத்து கிலோவுல ஒரு கேக்க வாங்கி அத நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா ஒக்காந்து மொக்குவோம். திடீர்னு நடந்தாலும், எல்லாரும் சந்தோஷமா இருந்து நம்ம நிச்சயதார்த்தம் ரொம்ப அழகா தானடீ நடந்து முடிஞ்சிருக்கு..... இதுக்குப் போயி கிச்சனுக்குள்ள வந்து கத்தி, கபடாவெல்லாம் தேடலாமா? வேண்டாம்டா என் அழகு பொம்ம!" என்று சந்தனாவிடம் கெஞ்சி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now