❤ சிறுநகை 67

303 30 12
                                    

கதிர் சந்தனாவை அழைத்து வந்து சுமலதாவின் காலடியில் அமர்ந்து கொண்டான். ஸோஃபாவில் அமர்ந்திருந்த ஆலென், சுமலதா இருவரின் காலடியில் கதிரும், சந்தனாவும் அமர்ந்திருந்தனர்.

"ம்மா.....!" என்று கூறி சுமலதாவின் கால்களைப் பற்றி அசைத்தவனிடம்,

"ஆ....ங்!" என்றார் சுமலதா பயங்கர கனவு ஒன்றில் இருந்து விழித்து எழுந்தவர் போல்.

"சின்ன வயசுல இருந்து அவளுக்குப் பிடிக்கவேயில்லன்னாலும், நீங்க அனுப்புற க்ளாஸ்க்கு எல்லாம் பல்லக் கடிச்சுட்டுப் போயிட்டு வந்தவ..... இன்னிக்கு உங்க கிட்ட இந்த வீட்ல சந்தோஷமே இல்லன்னு பேசியிருக்கக் கூடாது! லஷ்மி பேசுனது, ஆலென் ஸார் பேசுனது இது எல்லாமே உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துருக்கும்! வாழை நார்ல மாவப் பூசி சாமியா செஞ்சு
அதை கொலு மண்டபத்துல வச்சுட்டு, அந்த நிகழ்ச்சி நல்லா முடிஞ்சதுக்கப்புறம் அந்த சாமிய தூக்கி கீழ போட்டுட்டா எப்டியிருக்கும்..... இன்னிக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களுக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடுச்சு! இவங்க இவ்ளோ பேசுறதுனால இவங்க யாருக்கும் உங்க மேல பாசம் இல்லன்னு நினைச்சுடாதீங்க! எங்கூட வந்தாலும் லஷ்மி உங்கள நினைச்சுட்டு கவலைப்பட்டுட்டு தான் இருப்பா! உங்களுக்கு சில விஷயத்த புரிய வைக்கணும்னு தான் ஆலென் ஸார் இவ்ளோ பேசியிருக்காங்க! அத தப்பா நெனச்சுக்காதீங்க!"

"என்னோட தலையெழுத்தோ என்னவோ...... நான் வாழ்க்கையில நிறைய பாத்தது அவமானத்த மட்டுந்தான்! நான் யாருன்னு தெரிஞ்சவுடனே ச்சீச்சீ இவனா என் பொண்ணுக்கு மாப்பிள்ளன்னு கேட்டீங்களே? அப்பவும் எனக்கு ஒருமாதிரி அவமானமா ஃபீல் ஆச்சு!"

"லஷ்மிய மட்டும் என்னோட பொண்டாட்டி ஆக்கிக்குறதுன்னா இப்பவே இப்டியே கூட நான் அவள கூட்டிட்டுப் போயிடலாம்.... ஆனா எனக்கு அது வேண்டாம்! இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்குப் போயி என் பொண்ணக் குடுக்கணுமாங்குற எண்ணம் எப்ப உங்க மனசுல இருந்து போகுதோ சொல்லுங்க! அப்போ தான் முழு நிம்மதியோட நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும். அது வரைக்கும் நாங்க காத்துட்டு இருக்கோம்!" என்று கைகூப்பி சொன்னவனின் கையைப் பற்றிய சுமலதா,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now