❤ சிறுநகை 66

258 26 6
                                    

"ஏய்.... என்ன நீ பாட்டுல எதஎதயோ பேசிட்டே போயிட்டு இருக்க?  உம் பிள்ளை பேசுறது சரியான்னு நீயே சொல்லு பாகேஸ்வரி! என் வீட்ல வேல பாத்து சந்து முன்னால கையக்கட்டி நின்ன ஒரு பையன நான் எப்டி அவளுக்கே கல்யாணம் பண்ணித் தர முடியும்? இந்த ஆலெனுக்கு தான் கொஞ்சங்கூட அறிவேயில்ல; நீயாவது யோசிச்சு இது தப்புன்னு உம்பிள்ளைகிட்ட சொல்லு!" என்றார் சுமலதா.

"இல்ல சுமாம்மா....! கதிரு பண்றது எதுவும் எனக்கு தப்பா தெரியலங்க.... அவன் ஆசைப்பட்ட பொண்ண மொறயா பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்; நம்ம பாப்பா கூட அந்த மாதிரி தானுங்கம்மா நெனைக்குது! அது கதிர்ட்ட போயி நின்னு உன்னைய கல்யாணம் கட்டிக்கிட எனக்கு இஷ்டமில்ல; வெளிய போடான்னு ஒருவார்த்த சொல்லட்டும்! நாங்க இப்பவே இப்டியே எறங்கிப் போயிடுறோமுங்க..... மத்தபடி எப்பவோ நாங்க உங்க கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குனோமுன்ற ஒரே காரணத்துக்காக கதிர பாப்பாவுக்கு கல்யாணம் பண்ணித்தர மாட்டேன்னு சொல்லாதீங்கம்மா! எங்க வீட்டுக்கு வரப்போற உங்க மகள நாங்க தங்கமாப் பார்த்துக்குவோமுங்க சுமாம்மா! பிள்ளைங்களுக்கு வேண்டியது உங்க சம்மதமும், ஆசிர்வாதமும் மட்டுந்தாங்க!" என்று சுமலதாவிடம் சொன்னார் பாகேஸ்வரி.

"அடடா.....! கதிர்; அம்மா நம்ம பேசுறதுக்கு எல்லாம் சான்ஸே குடுக்க மாட்டாங்க போலிருக்கேடா? நாகர்கோவிலுக்கு வந்ததுல இருந்து ரொம்ப க்ளியர்கட்டா பேசுறாங்க இல்ல?" என்று கல்பனா கதிரிடம் கேட்க அவன் கல்பனாவைப் பார்த்து தலையாட்டினான்.

"என்னடா மண்டைய மண்டைய ஆட்டுற! ஏதாவது பேசேன்!" என்றவளிடம்,

"பாப்பாங்க ரெண்டு பேரையும் எங்கயாவது வெளிய கூட்டிட்டுப் போகச் சொல்லணும்கா!" என்று சொன்னவன் சஞ்சீவிடம் கண்ஜாடையில் குழந்தைகளைக் காட்டி ஜனார்த்தனனை கை காட்டினான்.

சஞ்சீவ் கதிரிடம் ஒருமுறை தலையசைத்து விட்டு ஜனார்த்தனனிடம் சென்றான்.

"மிஸ்டர் ஜனா..... பிள்ளைங்க இந்த அட்மாஸ்பியர்ல இருக்க வேண்டாம்! பாருங்க.... இப்பவே நடக்குறது எதுவும் புரியாம முழிச்சுட்டு ஒக்காந்துருக்காங்க. நீங்க அவங்கள கூட்டிக்கிட்டு ஒரு ட்ரைவ் போயிட்டு அரைமணி நேரம் கழிச்சு வாங்க!" என்று தன்னை மெதுவாக சற்று தள்ளி நகர்த்திச் சென்று தன்னிடம் சொன்ன சஞ்சீவிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now