❤ சிறுநகை 63

302 31 9
                                    

"பெத்த புள்ள அவன் வாழ்க்கைய காப்பாத்திக்கறதுக்காக தவிச்சுக்கிட்டு எத்தன யோசனைக்கப்பறம், எத்தன பேர அங்க கூட்டிட்டு கெளம்பிப் போய்ட்டு இருக்கான்.... அவனுக்கு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பாட்டியும் பரவாயில்ல; இப்டி நந்தி மாதிரி முன்னால நின்னு உயிர வாங்காம இருக்கலாம்ல?
இவன.... அப்டியே கார உட்டு ஏத்தி டயருக்குள்ள சிக்குன வாட்டர் பாட்டில மாதிரி சப்புளுச்சு போட்டா என்ன?" என்று கோபக்குரலில் கத்தியவனிடம்,

"கதிரு.... எஞ்சாமி; நல்ல காரியத்துக்காக வெளிய
கெளம்புறப்ப கோபப்படாதய்யா! நான் எறங்கிப் போயி உங்கப்பா கிட்ட பேசிட்டு வர்றேன்!" என்று மகனிடம் கெஞ்சினார் பாகேஸ்வரி.

"நீங்க இருங்கம்மா! நான் போய் அவர்ட்ட பேசிட்டு வர்றேன்!" என்று சொன்ன சஞ்சீவ் சற்று நேரம் முன்னதாக தன்னுடன் பழம் விட்டு தன்னுடைய மடியில் அமர்ந்திருந்த இளமதியிடம்,

"ஏய் குடுமிப்பாப்பு.... கொஞ்ச நேரம் நீ அங்கிள் மடியில இருந்து எழுந்துரிச்சுக்குவியாம்! அங்கிள் போய் தாத்தாட்ட பேசிட்டு வந்துடுவனாம்! ஓகே....ஜஸ்ட் அ செக்; ஐ வில் பீ பேக்!" என்று சொல்லி விட்டு அவளை காரின் இருக்கையில் அமர்த்தி விட்டு காரின் முன்பாக மறித்தபடி நின்ற கிருஷ்ணராஜின் முன்பாக சென்று கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

"அப்பா..... எல்லாரும் ஜாலியா கதிர் மாமாவுக்கு வர்ற ஆன்ட்டிய பாக்கப் போயிட்டு இருக்கும் போது ஏன்ப்பா இந்த தாத்தா மட்டும் நம்ம கூட வராம, நமக்கு வழியும் உடாம இப்டி
நிக்குறாரு? கிருஷ்ணா தாத்தா நல்ல தாத்தாவே இல்ல.... என்னப்பா?" என்று மெல்லிய குரலில் வெண்மதி முணுமுணுக்க ஜனார்த்தனன் தன் மகளிடம்,

"ஷ்ஷ்ஷ்! இப்டியெல்லாம் பேசக்கூடாது; நீ பேசுறது பாகேஸ் பாட்டி காதுல விழுந்தா அவங்க ஃபீல் பண்ணுவாங்கல்ல? அதுனால கொயட்டா இரு வெண்ணு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

"உங்களுக்கு இப்போ
என்ன வேணும் மிஸ்டர் கிருஷ்ணராஜ்?" என்று சஞ்சீவ் கதிருடைய அப்பாவிடம் கேட்க அவர் சஞ்சீவை ஏறஇறங்கப் பார்த்து விட்டு,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now